Indian Railways: ரயில் தாமதமானால்... பயணிகளுக்கு கிடைக்கும் சில சலுகைகளும் வசதிகளும்
Indian Railways: ரயில் பயணிகளின் வசதிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை இயற்றியுள்ளது. அந்த வகையில் ரயில் தாமதமானால், பயணிக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க, சில வசதிகளை செய்துள்ளது.
Indian Railways: உலகின் நான்காவது பெரிய ரயில் நெட்வொர்க் ஆக உள்ள இந்திய ரயில்வேயை போக்குவரத்தின் உயிர்நாடி எனலாம். தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணம் செய்து தங்கள் இலக்கை அடைகின்றனர். அனைத்து தரப்பிலான மக்களுக்கும் ஏற்ற போக்குவரத்தாக உள்ளது ரயிலின் சிறப்பு. உங்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப ஸ்லீப்பர், மூன்றாம் ஏசி, இரண்டாவது ஏசி அல்லது முதல் ஏசி டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். அதே நேரத்தில் நீண்ட தூர பயணத்திற்கும் மிகவும் வசதியானது.
ரயில் பயணிகளின் வசதிகளுக்காக இந்திய ரயில்வே பல விதிகளை இயற்றியுள்ளது. அந்த வகையில் ரயில் தாமதமானால், பயணிக்கு ஏற்படும் இன்னல்களை குறைக்க, சில வசதிகளை செய்துள்ளது.
இலவச உணவு
ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கும் வசதி கிடைக்கும். சில நேரங்களில் ரயில்கள் தாமதமாகின்றன. குறிப்பாக குளிர் காலத்தில், பனி மூட்டம் காரணமாக, வடக்கில் இருந்து வரும் ரயில்கள் பல மணி நேரம் தாமதமாக வருவதால் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அடர்ந்த மூடுபனி காரணமாக, பல நேரங்களில் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. ரயில் பல மணி நேரம் தாமதமாக வரும்போது பயணிகளுக்கு இலவச உணவை ரயில்வே வழங்குகிறது.
காத்திருப்பு அறை
உங்கள் ரயில் தாமதமாக வந்தால், நீங்கள் காத்திருப்பு அறையை இலவசமாக அணுகலாம். ராஜ்தானி அல்லது சதாப்தி போன்ற பிரீமியம் ரயிலில் பயணிப்பவர்களுக்கு, இந்த ரயில்கள் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இருந்தால், பயணிகளுக்கு இந்த வசதியை ரயில்வே இலவசமாக வழங்குகிறது.
கூடுதல் ஆர்பிஎப் பணியாளர்கள்
சில காரணங்களால் ரயில் மிகவும் தாமதமாக வந்தால், பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையத்தில் இருக்கும் உணவுக்கடைகள் வழக்கத்தை விட நீண்ட நேரம் திறந்திருக்கும். இரவில் ஓடும் ரயில்கள் தாமதமாக வரும்போது, பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கூடுதல் ஆர்பிஎப் பணியாளர்களையும் ரயில்வே நியமித்து வருகிறது.
டிக்கெட்டை ரத்து செய்தால் முழுத் தொகையும் திரும்ப கிடைக்குமா?
நீங்கள் பயணிக்கப் போகும் ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக புறப்படும் என்றால், உங்கள் திட்டத்தை மாற்றி, ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பினால், முழு டிக்கெட் தொகையும் உங்களுக்குத் திருப்பித் தரப்படும். சில காரணங்களுக்காக ரயில்வே ரயிலை அதன் வழித்தடத்தில் இருந்து திருப்பிவிட்டாலும், நீங்கள் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்து முழு பணத்தையும் திரும்பப் பெறலாம்.
ரயில் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
நீங்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டரில் இருந்து உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், ரயில்வே கவுண்டருக்குச் சென்று தான் உங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், மொத்த டிக்கெட் தொகையும் கவுண்டரில் ரொக்கமாக உங்களுக்கு வழங்கப்படும். அதாவது, எந்த வழியில் உங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்தீர்களோ, அதே வழியில் நீங்கள் ரத்துசெய்து பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | தட்கலில் டிக்கெட் புக் பண்றீங்களா... இந்த விஷயங்களை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ