குஜராத்தை சேர்ந்த இளம்பெண், உலகில் மிக நீளமான தலைமுடி கெண்ட பெண் என்னும் உலக சாதனை படைத்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குஜராத்தை சேர்ந்த இளம்பெண் நிலான்ஷி படேல். இவரது 5.7 அடி கூந்தல் தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளது. 


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்... பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் பாப் கட் செய்திருந்தேன். ஒருகட்டத்தில் எனக்கே அது பிடிக்காமல் போனது. பின்னர் என் பெற்றொரிடன் இனி நான் தலைமுடியை வெட்ட போவதில்லை என கூறினேன். அது நாள் முதல் இன்று வரை நான் எனது தலைமுடியை வெட்ட வில்லை. அதன் பரிசாக தற்போது உலக சாதனை சான்றிதழை ஏந்தி நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


மேலும் தனது தலைமுடி பராமரிப்பு குறித்து தெரிவித்த அவர், இதுவரை நீண்ட முடியை பராமரிப்பதில் எந்த பிரச்சனையும் எழவில்லை, என் தாய் மற்றும் சகோதரன் எனது தலைமுடியினை பராமரிக்க பெரிதும் உதவினர். வாரம் ஒருமுறை எனது தலைமுடியினை அலக்குவேன், சுமார் ஒரு மணி நேரம் கொண்டு உலர விடுவேன், பின்னர் கூந்தலை பின்னி முடிய குறைந்தது அரை மணி நேரம் தேவைப்படும் என தெரிவித்தார்.


நீளமான முடிகளை பராமரிப்பது கஷ்டன் என என் நண்பர்கள் கூறுவர், ஆனால் இதுவரை நான் அதை உணர்ந்ததில்லை எனவும் அவர் இத்தருணத்தில் குறிப்பிட்டுள்ளார்.



நிலான்ஷியின் இந்த முயற்சியை அங்கிகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அவருக்கு சாதனை சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் நிலாஷியின் சாதனை வீடியோவினையும் பகிர்ந்துள்ளது...