பிரபல பிரட்டன் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான Britain's Got Talent நிகழ்ச்சில் மும்பையை சேர்ந்த சிறுவன் பங்கேற்று நடுவர்களை உள்பட அனைவரையும் கவர்ந்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேந்தவர் அக்ஷத் சிங்(13 வயது). பிரட்டனில் நடைபெறும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Britain's Got Talent நிகழ்ச்சியில் இவர் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் 21-ஆம் நாள் திரையிடப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்சத் கான் தனது குறிக்கோள் இரண்டு., 1. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது. 2. தன்னால் முடியாதது எதுவும் இல்லை என அனைவரையும் நம்ப வைப்பது என தெரிவித்தார். இவரது வார்த்தைகளை கேட்ட நடுவர்கள் அனைவரைவும் அத்தருணமே அக்ஷத்தை பாராட்டினர். பின்னர் தனது அபார நடன திறமையை வெளிப்படுத்திய இந்திய சிறுவன் அக்ஷத்தினை நடுவர்கள் பாராட்டி வாழ்த்தினர்.


இந்நிகழ்ச்சியின் நடுவர்கள் சிம்மன் கோவல், டேவிட் வில்லியம், அலெக்ஷா டிக்சன் மற்றும் அமென்டா ஹோல்டன் ஆகியோர் அனைவரும் அக்ஷத்தை பாராட்டிய தருணம் தற்போது விடியோவாக இணையத்தில் வலம் வந்து இந்தியா முழுவதும் அக்ஷத்திற்கு பெருமை சேர்த்து வருகிறது.


சல்மான் கானின் தீவிர ரசிகனான அக்ஷத் இந்தி பாடல்கள் துவங்கி ஆங்கில பாடல்கள் என பம்பரமாய் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். இறுதியாக ‘பருமனான நபர்களாலும் நடனம் ஆட முடியும்’ என்ற வாக்கியுத்துடன் தனது நடத்தை முடித்தார். இவரது நடனத்தை பார்த்த நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டினர்.


அக்ஷத்தின் அருமையான நடனம் இதே உங்கள் பார்வைக்கு.,