பாரம்பரிய ஒற்றை நீண்ட வருடாந்திர விடுமுறையை விட இந்தியர்கள் அதிக குறுகிய இடைவெளிகளை அதிகளவில் தேர்வு செய்கிறார்கள் என்று ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயண மற்றும் சுற்றுலா நிறுவனமான SOTC டிராவலின் “இந்தியா விடுமுறை அறிக்கை 2019” இன் சமீபத்திய பதிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., 2015-ஆம் ஆண்டில் 7-10 நாட்களுடன் ஒப்பிடும்போது, ​​இந்த ஆண்டு பெரும்பாலான பதிலளித்தவர்கள் 3-6 நாட்கள் விடுமுறைக்குத் தெரிவுசெய்தனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. 


"ஒற்றை வருடாந்திர விடுமுறைக்கு மாறாக, இந்தியர்கள் பல குறுகிய விடுமுறை இடைவெளிகளுக்கான விருப்பத்தினை அதிகரித்து வருகின்றனர்" என்று SOTC டிராவல் நிர்வாக இயக்குனர் விஷால் சூரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., "இந்த குறுகிய கால பயணங்கள் பெஸ்போக் சாகசங்கள், தனி அல்லது துணை சுற்றுப்பயணங்கள் என்றபோதிலும், இந்தியர்கள் முன்பை விட அதிகமாக பயணம் செய்கிறார்கள், சாகச அல்லது உணவு போன்ற அவர்களின் ஆர்வங்கள் ஒரு முக்கியமான காரணியாக இதற்கு இருக்கின்றன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறாயினும், 56 வயதுக்கு மேற்பட்டவர்கள் 7-15 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் நீண்ட விடுமுறையை விரும்புகிறார்கள் என்பதை ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.


சர்வதேச விடுமுறைகள் என்பது அனைத்து வயதினருக்கும் வருடாந்திர பயணத் திட்டத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு விடுமுறைகள் பொறுத்தவரையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டியுள்ளன, 92% பதிலளித்தவர்கள் 2015-ஆம் ஆண்டில் 80% உடன் ஒப்பிடும்போது உள்நாட்டு விடுமுறையை எடுத்துக் கொண்டுள்ளனர்.


ஆன்மீக பயணங்கள் பட்டியலில் இணைந்த மதுரை, ராமேஸ்வரம், துவாரகா, ஷீர்டி, புஷ்கர், மதுரா, உஜ்ஜைன் மற்றும் வாரணாசி போன்ற இடங்களுக்கான பயணங்கள் இந்த குறுகிய விடுமுறையில் அதிகரித்து வருவதாகவும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது.


இந்த ஆய்வில் 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், 26-35 வயது, 36-55 வயது மற்றும் 56 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நான்கு வெவ்வேறு வயதினரைச் சேர்ந்த 1,100 க்கும் மேற்பட்டோர் உட்படுத்தப்பட்டுள்ளனர்.


25-35 மற்றும் 36-55 வயதிற்குட்பட்ட 70%-க்கும் அதிகமானோர் தங்கள் விடுமுறை நாட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ததில் ஆச்சரியமில்லை என்றாலும், 56 பிளஸ் பிரிவில் 48% ஆன்லைனில் முன்பதிவு செய்வதை உணர்ந்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.