பிரமாண்ட `ரயில் -18` முதல் சோதனை வெற்றி; டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18 பெட்டிகள் கொண்ட `ரயில் -18` அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 18 பெட்டிகள் கொண்ட "ரயில் -18" அடுத்த மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே "மேக் இன் இந்தியா" திட்டத்தின் கீழ் முற்றிலுமாக 80 சதவீத விழுக்காடு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ரயில் 18" எனப்படும் நவீன ரக ரயில் கடந்த மாதம் 29 ஆம் தேதி இந்திய ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பு.
நவீன ரக "ரயில் -18" ரயில்வே துறையிடம் வந்த பிறகு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் முதல் சோதனை மொராதாபாத் மற்றும் பரேலி இடையே சோதனை செய்யப்பட்டது. இஞ்சின் இல்லாமல் இயங்கும் இந்த "ரயில் -18" 90-120 கிமீ வேக சோதனையில் வெற்றி அடைந்துள்ளது. பின்னர் அடுத்த சோதனை மணிக்கு 160 கிமீ வேகத்திலும், 160 கிமீ முதல் 200 கிமீ வேகத்திலும் சோதனையும் மேற்கொள்ளப்படும். அடுத்த மாதம் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.
டி-18 ரயில்களில் சதாப்தி எக்ஸ்பிரஸ் பதிலாக ரயிலும், டெல்லியிலிருந்து போபால் பாதையிலும் இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நேரத்தில் அதன் வேகம் 160 கி.மீ. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரயில் ஆகும். இந்த ரயில் சென்னை இன் ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) இல் தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த வார இறுதி வரை இந்த முடிவின் இறுதி முடிவு எடுக்கும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.