ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் வெற்றிகரமாக தனது ரோந்துப் பணியை நிறைவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலமாக எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்க முடியும். பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லைக்கும் சென்று தாக்குதல் நடத்தும் வலிமை கொண்டது ஐஎன்எஸ் அரிஹந்த். தனது முதல் ரோந்துப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு முழு வலிமையான பாதுகாப்பாக ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் உருவெடுத்துள்ளது என்பது நாட்டிற்கு பெருமை.


 



ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் வெற்றிகரமாக தனது ரோந்துப் பணியை நிறைவு செய்துள்ளதற்கு நாட்டின் தலைவர்கள் பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உட்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஐஎன்எஸ் நீர்மூழ்கி கப்பல் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. 130 கோடி இந்திய மக்களை அச்சுறுத்தல்களிலிருந்து காப்பாற்றும். ஐ.என்.எஸ். அரிஹாண்ட்டை உருவாக்கிய நிபுணர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இது இந்திய வரலாற்றில் முக்கியமானது. நமது எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.