புதுடெல்லி: நீங்கள் சமையலுக்கு இண்டக்‌ஷன் அடுப்பை பயன்படுத்துபவர் என்றால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.  பலர் இண்டக்‌ஷனில் உணவை சமைக்கிறார்கள், ஆனால் அதை ஒரு மின்சார சாதனமாக கருதி, அதன் தூய்மையில் அதிக கவனம் செலுத்துவதில்லை. அடுப்பை  சுத்தம் செய்வது முக்கியம். நீங்கள் இண்டக்‌ஷன் அடுப்பை சரியாகப் பயன்படுத்தாவிட்டால்,  பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேவை இல்லாமல் இண்டக்‌ஷ்னில்பாத்திரத்தை வைக்க வேண்டாம்


தேவை இல்லாமல் இண்டக்‌ஷனில் பாத்திரத்தை வைக்கும் தவறை செய்யாதீர்கள். அதே நேரத்தில், அதை சுத்தம் செய்ய, துணியை சாதாரண நீரில் நனைத்து, பின்னர் அந்த ஈரமான துணியை கொண்டு சுத்தம் செய்யவும்.


ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!


இண்டக்‌ஷனிற்கான பாத்திரங்களைப் பயன்படுத்துதல்


பல சமயங்களில் நீங்கள் பயன்படுத்தும் சாதாரண பாத்திரங்களை அதில் பயன்படுத்த இயலாது. இண்டக்‌ஷன் அடுப்பிற்கான பிரத்யேக பாத்திரங்களை பயன்படுத்தவும்.


ப்ளோயரை தினமும் சுத்தம் செய்யுங்கள்


இண்டக்‌ஷனின் ப்ளோயரை தினமும் சுத்தம் செய்வதும் முக்கியம். இதற்கு, பழைய டூத் பிரஷை (Tooth-Brush) எடுத்து, அதைக் கொண்டு ப்ளோயரை சுத்தம் செய்யவும். இருப்பினும், பிரஷ் ஈரமாக இல்லை என்பதை உறுதிப்படுத்தவும். ப்ளோயரை தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பிரஷ் மூலம் சுத்தம் செய்யும் போது தூசியும் மண்ணும் தானாக வெளியேறும்.


ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!


அதிக கனமான பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம்.


தண்ணீரை சூடாக்க பல முறை கனமான பாத்திரங்களை இண்டஷனில் வைக்கும் பழக்க உள்ளது. இது சரியான வழி அல்ல. இது இண்டக்‌ஷன் அடுப்பை சேதப்படுத்தலாம்.


பராமரிப்பில் கவனம் 


நீங்கள் எப்போதாவது மட்டுமே இண்டக்‌ஷனை பயன்படுத்தினால், கூட அதன் பராமரிப்பின் மீது கவனம் செலுத்தவும். ஒழுங்காக பராமரிக்கப்படாவிட்டால் இண்டக்‌ஷன் அடுப்பு சேதமடையலாம்.


சிறந்த நிறுவனத்தின் இண்டக்‌ஷன் அடுப்பை பயன்படுத்தவும்


எப்போதும் ஒரு பிராண்டட் நிறுவனத்திடம் இருந்து இண்டக்ஷன் வாங்கவும். நல்ல நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு உத்தரவாதக் காலத்தைக் கொடுக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், இண்டக்‌ஷன் அடுப்பில் ஏதேனும் சிக்கல் இருந்தால், நீங்கள் அதை சரிசெய்யலாம். இதன் மற்றொரு நன்மை என்னவென்றால், இது நீண்ட காலம் நீடித்து உழைக்கும்.


ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR