SeePics: tattoo கலைஞர்கள் திறமையை வளர்க்கும் Instagram!
tattoo குத்திக்கொள்வது என்பது நரம்பு எழுச்சியடைய செய்யும் ஒரு அனுபவம்.
tattoo குத்திக்கொள்வது என்பது நரம்பு எழுச்சியடைய செய்யும் ஒரு அனுபவம்.
அப்படி என்றால் என்ன, இதை எங்கு பெற வேண்டும் என்று ஒருவர் சிந்திக்க ஆரம்பித்தால், அதற்கான முடிவுகளை அவர் அடைய அப்போதைய காலகட்டத்தில் நெடு நாட்கள் பிடிக்கும். ஆனால் இப்போது அவ்வாறு அல்ல, ஒரு சில நிமிடங்களில் அவற்றை பெற்றி தெரிந்துக்கொள்ள முடியும்.
கையில் இருக்கும் கைபேசியும், கைபேசியில் இருக்கும் இணைய இணைப்பும் உங்களுக்கு இந்து நவநாகரீக உலகை நிமிடங்களில் அறிமுகம் செய்துவிடும். அறிமுகம் பெற்றால் போதுமா?... தனக்கு வேண்டியவற்றை, தான் விரும்புவனவற்றை அடைய நாமும் கஷ்டப்பட்டு தானே ஆகவேண்டும்.
முன்பெல்லாம் ஒரு tattoo பெற வேண்டுமானால், அதை எப்படி பெறுவது, யாரிடம் பெருவது, அந்த tattoo எவ்வாறு இருக்க வேண்டும் என tattoo விரும்பி சிந்திப்பதுண்டு. அப்போதைய காலத்தில் தங்களுக்கான சிந்தனை எல்லைகளும் வரையறுக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்போது அவ்வாறு இல்லை.
இந்த முறைமையை மாற்றிய பெருமை Instagram-யே சேரும். Instagram மூலம் இக்கால tattoo கலைஞர்கள் தங்கள் படைப்புகளை உலகறிய செய்து வருகின்றனர். tattoo கலைஞர்களின் படைப்புகளை பார்க்கும் tattoo விரும்பிகள், தங்களுக்கு தேவையான tattoo எப்படி இருக்க வேண்டும் என யூகித்துக்கொள்கின்றனர். எவ்வாறு எல்லாம் இருக்க வேண்டும் என்று முன்கூட்டிய சிந்திக்கின்றனர். குறிப்பாக tattoo விரும்பிகளின் சிந்தனை களம் பரந்துள்ளது எனலாம்.
மேலும் நீங்கள் முதல் முறையாக ஒரு tattoo அங்காடிக்கு சென்று tattoo குத்திக்கொள்ள விரும்பினால், உங்களுக்கு tattoo குத்த வரும் கலைஞர் அனுபவசாலியா, அவரது படைப்பு திறமை எவ்வாறு இருக்கும் என்ற சந்தேகத்துடன் இருக்க வேண்டும், ஆனால் இந்த Instagram பதிவுகள் மூலம் உங்கள் tattoo-வின் கலைஞரை நீங்கள் வீட்டில் இருந்தே தேர்ந்தெடுக்க இயலும். குறிப்பிட்ட அந்த கலைஞரின் படைப்புகள் பிடித்துள்ளதா?, முடிந்தது பிரச்சனை, அவரது தொடர்பு எண்ணை அதே Instagram பக்கத்தில் இருந்து எடுத்து உடனே தொடர்புகொண்டு உங்கள் விருப்பத்தை பகிர்ந்துக்கொள்ளலாம்.