கார் வாங்க ஷோரூமுக்கு வந்தால் அவமானப்படுத்துவியா? பதிலடி கொடுத்த இளைஞர்!!
`ஆள் பாதி ஆடை பாதி` என்பது பழமொழியாக இருக்கலாம், ஆனால் அது என்றும் பொருந்தும் மொழி என்பதை உணர்த்து சம்பவம்...
நட்புக்காக திரைப்படக் காட்சியை நினைவூட்டும் கார் வாங்கும் உண்மைச் சம்பவம். கார் வாங்குவதற்காக கார் ஷோரூமுக்கு வந்த திட்டிய பணியாளர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த இளைஞரின் செய்தி வைரலாகிறது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் இராமன பாள்யா பகுதியில் வசிக்கும் கெம்பேகவுடா என்ற இளைஞன் கார் வாங்க திட்டமிட்டார். அதற்காக, தும்கூரில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமுக்கு சென்று கார்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் அணிந்திருந்த ஆடைகளைப் பார்த்த பணியாளர்கள் அவரை அவமதித்துள்ளனர். 10 ரூபாய் பெறாத ஆடை அணிந்துள நீ கார் வாங்கப் போறியா என்று கேட்டு, கெம்பேகவுடாவை அவமானப்படுத்தினார்கள்.
இதனால், கோபமும், ஆத்திரமும் அடைந்த அந்த இளைஞன், 1 மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாயைக் கொண்டுவருகிறேன், உடனடியாக காரை டெலிவரி கொடுப்பீர்களா என கேட்டு சவால் விட்டார்.
ALSO READ | உலகிலேயே யாருமே கேள்விப்படாத விசித்திரமான காப்பீட்டு கோரிக்கைகள்!
அதேபோல ஒரு மணி நேரத்தில் 10 லட்சம் ரூபாய் பணத்தையும் கொண்டுவந்து கொடுத்த கெம்பேகவுடா, கரை உடனே டெலிவரி செய்ய வேண்டும் என அடம்பிடித்தார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
இளைஞன் ஒரு மணி நேரத்துக்குள் ரூபாய் 10 லட்ச ரூபாய் கொண்டு வந்ததும் அதிர்ர்சியடைந்த பணியாளர்களுக்கு இப்போது அவமானமானது.
இதை வீடியோவாக பாருங்கள்...
ஆனாலும் ஆச்சரியத்தில் திக்குமுக்காடிய ஷோரூம் ஊழியர்கள், 4 அல்லது 5 நாட்களில் கார் டெலிவரி செய்வதாக கூறியுள்ளனர்.
அதைக் கேட்ட இளைஞன், நீங்கள் அவமானப்படுத்துவதற்கு முன்பு இதை செஒல்லியிருந்தால் நான் ஒத்துக் கொண்டிருப்பேன். ஆனால், இப்போது உடனே காரை டெலிவரி செய்ய வேண்டும் பிடிவாதமாக இருந்தார்.
ALSO READ | இப்படி விண்ணப்பித்தா 60 என்ன? 1000 அப்ளிகேஷனுக்கும் வேலை கிடைக்காது
இதனால், ஷோரூம் ஊழியர்களுக்கும் இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நீங்கள் பணம் கொடுத்தாலும் உடனே காரை டெலிவரி செய்ய முடியாது என சொல்ல வாக்குவாதம் முற்றியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திலக்பார்க் போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக தனித்தனியாக எழுதி வாங்கிய காவல்துறையினர், விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
'ஆள் பாதி ஆடை பாதி' என்பது பழமொழியாக இருக்கலாம், ஆனால் அது இன்றும் பொருந்தும் மொழியாக இருக்கிறது.
ALSO READ | Check in Baggage: விமானத்தில் உங்கள் லக்கேஜ் எப்படி கையாளப்படுகிறது என தெரியுமா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR