ஏப்ரல் 20-ல் 420 உருவானதன் சுவாரஸ்ய பின்னணி
420 என்ற சொல்லாடல் வழக்கமாக உபயோகிக்கப்படும் நிலையில், அதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது.
420 என்றாலே சட்டவிரோத, அதாவது தகிடுதத்தங்களை செய்யக்கூடியவர்கள் என தெரிந்து கொள்ளலாம். ஏதாவது சட்டத்துக்கு புறம்பாக செய்யக்கூடிய செயல்களை செய்பவர்களை உடனே 420 என்று கிண்டலாக அடையாளப்படுத்துவது இன்றும் வழகத்தில் உள்ளது. ஆனால், இந்த 420க்குப் பின்னால் ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது.
420 என்ற வார்த்தையும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியானது தான்.
மேலும் படிக்க | Bank Locker: விதிகளில் மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம்
அமெரிக்காவின் கலிஃபோர்னியான மாகாணத்தில் இருக்கும் மரின் கவுண்டியில் உள்ள ரஃபேல் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தோற்றுவித்தது தான் இந்த 420. கஞ்சா புகைப்பதற்காக அவர்கள் பயன்படுத்திய இந்த ரகசிய குறியீடு நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது. 1971 ஆம் ஆண்டு சான் ரஃபேல் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் மாலை 4:20 மணியளவில் விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டரின் வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு அருகில் கஞ்சா புகைப்பதற்கு கூடியுள்ளனர். பள்ளி நடவடிக்கைகள் அனைத்து முடிந்த பின்னர், விளையாடுவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த நேரத்தை கஞ்சா புகைப்பதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
ஸ்டீவ் கேப்பர், டேவ் ரெடிக்ஸ், ஜெஃப்ரி நோயல், லாரி ஸ்வார்ட்ஸ் மற்றும் மார்க் கிராவிச் ஆகியோர் அடங்கிய அவர்களின் குழுவுக்கு "வால்டோஸ்" என்று பெயரிட்டு அழைத்துள்ளனர். அவர்களுக்குள் 420 என்பது கஞ்சா புகைப்பதற்கான ரகசிய குறியீடு. ஹை டைம்ஸின் முன்னாள் ஆசிரியர் ஸ்டீவன் ஹேகர் இது குறித்து பேசும்போது, அந்த மாணவர்கள் ரகசிய குறியீடாக பயன்படுத்தியது நாளடைவில் வடக்கு கலிஃபோர்னியா முழுவதும் பரவியது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கோவா போனா இந்த வேலைகளை மட்டும் கண்டிப்பா பண்ணிடாதீங்க..
இதேபோல், ‘கிரேட்புல் டெட்’ எனும் ராக் இசைக்குழுவும் 420 என்ற வார்த்தையை பிரபலப்படுத்தினர். பாடகர் பாப் டைலன் இந்த 420 ஐ வைத்து உருவாக்கிய பாடலும் ஹிட்டானதால், 420 என்ற வார்த்தை மிகவும் பிரபலமானது. இவைதவிர பிரபலமான ஹாலிவுட் படங்கள், புத்தகங்களிலும் 420 வார்த்தை இடம்பெற்றதால், உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்த வார்த்தை பிரபலமாக மாறியது. கலிபோர்னியாவில் சில பகுதிகளில் ஏப்ரல் 20 ஆம் தேதி கஞ்சா புகைப்பது ஒரு நிகழ்வாகவும் கடைபிடிக்கப்படுகிறதாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR