Bank Locker: விதிகளில் மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம்

Bank Locker New Rules : லாக்கரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் புகார்களுக்குப் பிறகு வங்கி லாக்கரின் விதிகளில் பெரிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 21, 2022, 11:51 AM IST
  • வங்கி லாக்கரின் விதிகளில் பெரிய மாற்றங்களை ரிசர்வ் வங்கி செய்துள்ளது.
  • விதிகள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வந்தன.
  • டிஸ்பிளே மூலம் காலி லாக்கரின் தகவலைப் பெறுவீர்கள்.
Bank Locker: விதிகளில் மாற்றம், தெரிந்துகொள்வது அவசியம் title=

வங்கி லாக்கர் புதிய விதிகள்: வங்கி வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதிய விதிகளை உருவாக்கி வருகிறது. சமீபத்தில், ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விதிகளை மாற்றியது. இப்போது வங்கி, லாக்கர் விதிகளை மாற்றியுள்ளது. 

வங்கிகள் அளிக்கும் லாக்கர் வசதியை நீங்களும் பயன்படுத்தினால், அல்லது லாக்கர் வசதியை பெற திட்டமிட்டிருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

விதிகள் ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வந்தன

ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டு புதிய வங்கி லாக்கர் விதிகளை ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தியது. வங்கியில் லாக்கர் வசதியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் புகாரின் பேரில் ரிசர்வ் வங்கி இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் அமல்படுத்துவதன் நேரடி பலன்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். 

100 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்

வங்கி லாக்கர்களில் அடிக்கடி திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது. ஆனால் இப்போது வங்கி லாக்கரில் உள்ள பொருட்கள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட வங்கியின் சார்பில் வாடிக்கையாளருக்கு லாக்கர் வாடகையை விட 100 மடங்கு இழப்பீடு வழங்கப்படும். இதுவரை வங்கிகள் திருட்டு சம்பவத்தை அலட்சியப்படுத்தியதோடு அதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்றும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது. 

டிஸ்பிளே மூலம் காலி லாக்கரின் தகவலைப் பெறுவீர்கள்

வங்கிகள் காலி லாக்கர்களின் பட்டியல், லாக்கருக்கான காத்திருப்பு பட்டியல் எண் ஆகியவற்றைக் காண்பிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியுள்ளது. இது லாக்கர் அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை மறைக்க முடியாது என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. சரியான தகவல்களைப் பெற அவர்களுக்கு உரிமை உண்டு என்பது டிசர்வ் வங்கியின் கருத்து.

மேலும் படிக்க | Aadhaar Update: உங்கள் மொழியில் ஆதார் அட்டையை புதுப்பிக்கலாம், வழிமுறைகள் இதோ 

மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கைகள் பெறப்படும்

இப்போது நீங்கள் உங்கள் லாக்கரை அணுகும் போதெல்லாம், அது பற்றிய தகவல் வங்கி மூலம் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் வாயிலான அனுப்பப்படும். எந்தவொரு மோசடியையும் தடுக்க ரிசர்வ் வங்கி இந்த விதியை உருவாக்கியுள்ளது.

வங்கி அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு வாடகை பெறலாம்

புதிய விதிகளின்படி, அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கான லாக்கர் வாடகையை பெற வங்கிகளுக்கு உரிமை உண்டு. உங்கள் லாக்கரின் வாடகை ரூ. 2000 என்றால், மற்ற பராமரிப்புக் கட்டணங்களைத் தவிர வங்கி உங்களிடமிருந்து ரூ.6000-க்கு மேல் வசூலிக்க முடியாது.

சிசிடிவி கேமராக்கள் தேவை

இனி சிசிடிவி மூலம் லாக்கர் அறைக்கு வருபவர்களை கண்காணிப்பது அவசியமாகும். மேலும், சிசிடிவி காட்சிகளின் தரவுகள் 180 நாட்களுக்கு சேமிக்கப்பட வேண்டும். திருட்டு அல்லது பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டால், இனி போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரிக்க முடியும்.

மேலும் படிக்க | HDFC Bank வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: எஃப்டி வட்டி விகிதங்களின் மாற்றம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News