கொசுக்கடி என்பது உலகளவில் இருக்கும் பிரச்சனை. இந்தியாவில் மட்டுமே கொசுக்கடி இருப்பதாக கூட சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பணக்கார நாடுகளாக இருக்கும் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொசுக்கள் உள்ளன. இந்த கொசுக்களால் பரவும் தொற்று நோய்களில் இருந்து தப்பிக்க பல்வேறு சாதனங்கள் மற்றும் ஸ்பிரேக்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், அவற்றில் இருந்து சற்று வலிமை கூடுதலாக ஸ்மார்ட் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மார்ச் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு அமோகமாக இருக்கும்: உங்களுக்கு இந்த ராசியா


லிவ் எனப் பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட் கொசுவிரட்டியை தெர்மாசெல் நிறுவனம் கண்டுபிடித்து சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் கொசு விரட்டியான இதனை அமேசான் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் ஆகியவற்றுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த சாதனங்களைத் தவிர ஸ்மார்ட்போன்கள் மூலமும் இந்த ஸ்மார்ட் கொசுவிரட்டியை பயன்படுத்த முடியும். லிவ் பிளஸ் என்ற மொபைல் செயலியின் துணையுடன் லிவ்வை இயக்க முடியும். 



லிவ் ஸ்மார்ட் கொசுவிரட்டியில் இருக்கும் மருந்தை நாள்தோறும் 8 மணி நேரம் எனப் பயன்படுத்தினால் 12 வாரங்களுக்கும் குறையாமல் பயன்படுத்தலாம். மெட்டோஃபுளூதெரின் ரசாயனம் புகைபோல் வெளியாகி, 20 அடி தூரத்துக்கு கொசுக்களை அண்டவிடாமல் செய்யும். ஆனால், இந்த ஸ்மார்ட் கொசு விரட்டியின் விலை தான் தலையை கிறுகிறுக்க வைக்கிறது. அமெரிக்காவில் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ள ஒரு லிவ் ஸ்மார்ட் கொசுவிரட்டியின் விலை 52 ஆயிரம் ரூபாயாம். ஒருமுறை மருந்து தீர்ந்துவிட்டால் 6 மருந்துகளை உள்ளடக்கிய ஒரு பேக் 9100 ரூபாய்க்கு வாங்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் பணக்காரர்கள் மட்டுமே அந்த கொசு விரட்டியை வாங்கிப் பயன்படுத்த முடியும். 


மேலும் படிக்க | Home Loan: வீட்டுக்கடனுக்கான EMI குறைக்க சூப்பரான ஐடியா..! மிஸ் பண்ணிடாதீங்க


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR