மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்: நீங்கள் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்பினால், நீங்கள் அரசாங்கத்தின் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும், ஏனென்றால் அரசாங்க திட்டத்தில் முதலீடு செய்வது வருமானத்திற்கு முழுமையான உத்தரவாதம் தரும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் பிறந்த குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்குமான சிறு சேமிப்புத் திட்டங்கள் தபால் நிலையங்களில் உள்ளன. இங்கே சேமிக்கும் பணம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்பதோடு, நல்ல வட்டி லாபமும் கிடைக்கும். நீங்களும் போஸ்ட் ஆபீஸில் சேமித்து அதிகம் பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்களுக்கு ஒரு சிறப்பான திட்டம் உள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே விரிவாக அறிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு முறை மட்டுமே முதலீடு செய்தால் போதும்
தபால் நிலையத்தின் மாத வருமான திட்டத்தில் நல்ல வட்டி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், ஒருமுறை முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மொத்தத் தொகையை வட்டியாகப் பெறலாம். ஜனவரி-மார்ச் 2023க்கான வட்டி விகிதம் 7.1% ஆக உயர்ந்துள்ளது. இந்த வட்டி விகிதங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். அதேபோல் இந்தத் திட்டத்தில் லாக்-இன் காலம் 5 ஆண்டுகள் ஆகும். இதனிடையே சமீபத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில், இந்த திட்டத்தில் முதலீட்டு வரம்பை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்


மாதம் 9 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
இந்தத் திட்டத்தில் முதலீட்டு வரம்பு அதிகரித்துள்ளது. அதன் பிறகு ரூ.15 லட்சத்தை கூட்டுக் கணக்கில் முதலீடு செய்யலாம். 15 லட்சத்தை முதலீடு செய்தால், மாதந்தோறும் சுமார் 9 ஆயிரம் ரூபாய் வட்டியாக கிடைக்கும். இருப்பினும், இதன் கீழ், கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முதலீட்டுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும். இந்த வட்டி மாத இறுதியில் செலுத்தப்படும் மற்றும் மெச்சூரிட்டி காலம் வரை இந்தத் தொகையைப் பெறுவீர்கள். மறுபுறம், ஒரே கணக்கில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், மாத வட்டி ரூ.5,325 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ