Post Office Schemes: உங்கள் எதிர்கால தேவையினை கருதி நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் பட்சத்தில் வங்கிகள் அல்லது மத்திய அரசால் இயக்கப்படும் தபால் நிலையங்கள் உங்களின் சிறந்த தேர்வாகும். வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு சிறந்த வருமானத்தை தருவதோடு மட்டுமின்றி இது உங்கள் பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது. தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் பெரிய வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை விட அதிகளவில் வழங்குகிறது. அதிக ரிஸ்க் எடுக்காமல் பணத்தை பாதுக்காப்பான வழியில் முதலீடு செய்து நிலையான வருமானத்தை பெற நினைப்பவர்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
தபால் அலுவக டைம் டெபாசிட் திட்டம்:
தபால் அலுவலகத்தால் வழங்கப்படும் டைம் டெபாசிட் திட்டமானது, ஐந்து வருட காலத்துடன் கூடிய பிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வைப்புகளில் 6.7 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. நீங்கள் இந்தத் திட்டத்தை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அப்டேட் செய்துகொள்ளலாம் மற்றும் இது ஒரு சிறந்த நீண்ட கால முதலீட்டு விருப்பமாக உள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
தபால் அலுவலகத்தால் மூத்த குடிமக்களின் நலனுக்காக வழங்கப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) ஆனது சேமிப்பு செபாசிட் தொகைகளுக்கு 8 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் வயதானவர்கள் அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனது ஓய்வுகாலத்தில் நிலையான மற்றும் சிறந்த வருமானத்தை பெறலாம். இதுதவிர இந்த திட்டம் உங்கள் பணத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
மேலும், மூத்த குடிமக்களுக்கான பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா திட்டம் 2017ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சம். மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு அடிப்படையில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. முதலீடு செய்யப்பட்ட தொகையைப் பொறுத்து, ஓய்வூதியத் தொகை ரூ.1,000 முதல் ரூ.9,250 வரை இருக்கலாம்.
மேலும் படிக்க | தளபதி 67-ல் சர்பிரைஸ் என்டிரி கொடுத்த சிவகார்த்திகேயன் ஹீரோயின்...! மாஸ் அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ