IRCTC AIR Black Friday Offer: அமெரிக்காவில் தாங்கஸ் கிவிங் நாளுக்கு பிறகு கருப்பு வெள்ளி என்னும் பிளாக் ப்ரைடே தினம் கொண்டாடப்படுகிறது. இது கிறிஸ்மஸ் பருவத்தின் தொடக்கமாக அதிகாரப்பூர்வமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கருப்பு வெள்ளி நவம்பர் 29 அன்று கொண்டாடப்படும் நிலையில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு IRCTC சலுகைகளை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ஐஆர்சிடிசி ஏஐஆர் டிக்கெட் முன் பதிவு தளம்


IRCTC அறிவித்துள்ள சலுகை அனைத்து வகையான விமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும் . இந்த சலுகை ஐஆர்சிடிசி ஏஐஆர் (IRCTC AIR) அதாவது விமான டிக்கெட் முன்பதிவு தளத்திற்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்யும் அனைத்து விமான டிக்கெட்டுகளுக்கும் வழங்கப்படும் இந்த சலுகை மூலம் நீங்கள் பணத்தை சேமிக்கலாம்.


கன்வீனியன்ஸ் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி


IRCTC எக்ஸ் தளத்தில், “விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய நவம்பர் 29, 2024 சிறந்த நேரமாக இருக்கும். IRCTC AIR வழங்கும் கருப்பு வெள்ளி சலுகையைப் பயன்படுத்தலாம். இதில், கன்வீனியன்ஸ் கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். இது தவிர ரூ.50 லட்சம் வரையிலான இலவச பயணக் காப்பீடும் கிடைக்கும்.


50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச காப்பீடு


ஐஆர்சிடிசி ஏஐஆர் டிக்கெட் முன்பதிவு தளத்தில், இந்த சலுகையின் கீழ் பயணிகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச காப்பீட்டையும் வழங்குகிறது. இந்தச் சலுகை கருப்பு வெள்ளிக்கு அதாவது நவம்பர் 29ஆம் தேதிக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.


ஐஆர்சிடிசி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், இந்த தகவலை அளித்துள்ளது.



மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: நினைவில் கொள்ள வேண்டிய மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்


IRCTC வழங்கு பிளாக் ப்ரைடே ஆஃபரை எவ்வாறு பயன்படுத்துவது?


1. முதலில் உங்கள் மொபைலில் IRCTC AIR செயலியைத் திறக்கவும்


2. அதன் பிறகு, உங்கள் கணக்குத் தகவலை உள்ளிட்டு உள்நுழையவும்.


3. அடுத்த பக்கத்தில், பயணம் தொடர்பான தகவல்களை உள்ளிடவும், பயணம் மேற்கொள்ள வேண்டிய இடம், பயணம் செய்யும் தேதி, பயணியின் பெயர் ஆகியவை அடங்கும்.


4. அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, கட்டணப் பக்கம் தோன்றும். இதில் பணம் செலுத்தவும்.


மேலும் படிக்க | ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் அதிகரிக்கும் பயனாளிகளின் எண்ணிக்கை: எந்த மாநிலம் முதலிடம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ