IRCTC : திருமண உறவில் அடியெடுத்த வைத்த உடன் அதனை புத்துணர்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் தொடங்க இளம் தம்பதிகள் ஹனிமூன் டிரிப் செல்வார்கள். அந்த நேரத்தில் தம்பதிகள் இருவரும் நிறைய நேரத்தை தனியாக செலவிட வாய்ப்பு கிடைக்கும். அப்படியான மகிழ்ச்சியான தேனிலவு பயணம் பாதுகாப்பாகவும் இருப்பது அவசியம். இதற்காக இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) ஹினிமூன் பேக்கேஜ் டிரிப் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் ரயில், விமானம், தங்குவதற்கான ஹோட்டல் புக்கிங் என எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்று வருகிறது. இந்த சூப்பரான டூர் பேக்கேஜ்கள் மூலம் உங்களின் ஹனிமூன் பயணத்தை மேலும் சிறப்பாக்க முடியும். அந்தவகையில் ஐஆர்டிசியின் புதிய ஹனிமூன் டூர் பேக்கேஜ் விவரங்களை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லடாக் ஹனிமூன் பேக்கேஜ்


இந்த பயணம் டெல்லியில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்குகிறது. லடாக் ஹனிமூன் பேக்கேஜ் 6 இரவுகள் மற்றும் 7 பகல்களுக்கானது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் லடாக்  அழைத்து சென்று, அழைத்து வரப்படுவார்கள். இந்த டூர் பேக்கேஜில் தம்பதிகளின் பயண டிக்கெட்டுகள், உணவு செலவுகள், வாகன செலவுகள் மற்றும் ஹோட்டல் செலவுகள் ஆகியவை அடங்கும். கூடுதல் தகவல் தேவைப்பட்டால் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை கவனமாக படிக்கவும். பேக்கேஜ் கட்டணம் பொறுத்தவரை இரண்டு நபர்கள் யணம் செய்தால் ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணம் ரூ.44,700. அதாவது வெறும் 1 லட்சத்தில் இருவரும் தேனிலவு பயணத்தை முடித்துவிடுவீர்கள். 7 நாட்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும். ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | மாதவிடாய் காலத்தில் உடலுறவு... பின்பற்ற வேண்டிய 7 டிப்ஸ்!


கோவா டூர் பேக்கேஜ்


கோவா டூர் பேக்கேஜ் செப்டம்பர் 13 முதல் தொடங்குகிறது. இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். பேக்கேஜ் 3 இரவுகள் மற்றும் 4 நாட்கள். இந்த பேக்கேஜிலும் நீங்கள் விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். பேக்கேஜ் கட்டணத்தில் தம்பதிகளின் பயண டிக்கெட்டுகள், உணவு செலவுகள், வாகன செலவுகள் மற்றும் ஹோட்டல் செலவுகள் ஆகியவை அடங்கும். பேக்கேஜ் கட்டணம் பொறுத்தவரை இரண்டு நபர்களுடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணம் ரூ.19245 மட்டுமே. அதாவது சுமார் ரூ.40 ஆயிரத்தை மட்டும் செலவழித்து கோவாவில் தேனிலவு பயணத்தை முடிப்பீர்கள்.


கொல்கத்தா ஹனிமூன் டூர் பேக்கேஜ்


இந்த ஹனிமூன் டூர் பேக்கேஜில் டார்ஜிலிங், கேங்டாக் மற்றும் கலிம்போங் ஆகிய 3 இடங்களை ஒன்றாகப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த டூருக்கான டிக்கெட்டுகள் ஒவ்வொரு நாளும் முன்பதிவு செய்யப்படுகின்றன. பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களை கொண்டது. இந்த பேக்கேஜ் கட்டணத்திலும் தம்பதிகளின் பயண டிக்கெட்டுகள், உணவு செலவுகள், வாகன செலவுகள் மற்றும் ஹோட்டல் செலவுகள் ஆகியவை அடங்கும். பேக்கேஜ் கட்டணம், இரண்டு நபர்களுடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு பேக்கேஜ் கட்டணம் ரூ.48,120 மட்டுமே.


மேலும் படிக்க | திருமண உறவில் அதிக கோபம் வருகிறதா... இந்த 4 விஷயங்களை செய்தால் நிம்மதியாய் இருக்கலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ