2023ல் ரயில்வே செய்த மிகப்பெரிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்
Year Ender 2023: ஒவ்வொரு ஆண்டும் போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வே விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ரயில்வே பல நல்ல மாற்றங்களைச் செய்துள்ளது.
ஐஆர்சிடிசி இந்தியன் ரயில்வே 2023 முடிவு ஸ்பெஷல்: 2023 ஆம் ஆண்டு முடியப் போகிறது. புதிய ஆண்டு தொடங்க உள்ளது. 2023 ஆம் ஆண்டில் பொது மக்களுக்கு நன்மை பயக்கும் பல விஷயங்கள் நடந்தன. மறுபுறம் சில விஷயங்களில் சாமானியர் மகிழ்ச்சியடையவில்லை. இந்தியாவின் அனைத்து துறைகளையும் போலவே, ரயில்வே துறையும் பல மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்களால் சாமானிய மக்களுக்கு நன்மை ஏற்பட்டதா அல்லது நஷ்டம் ஏற்பட்டதா? இந்த கேள்விக்கான பதிலை நாம் இன்றைய கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.
பொது டிக்கெட்டுக்கான வசதி:
பொதுவாக பொது டிக்கெட்டுகள் எடுப்பதற்காக ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் நிற்பது என்பது சிரமமாக இருக்கும். அங்கு நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிர்க்க, உங்கள் தொலைபேசியின் உதவியைப் பெறலாம். இதன் மூலம் ஒரு செயலியைப் பயன்படுத்தி பொது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | ரயிலில் பைக்கை பார்சல் செய்து அனுப்ப எவ்வளவு செலவாகும்? முழு விவரம்!
இந்த செயலி மூலம் பொது டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள் வரிசையில் நிற்காமல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதனுடன், ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்களையும் இந்திய ரயில்வே நிறுவியுள்ளது. ரயில்வேயின் இந்த நடவடிக்கை, பொது டிக்கெட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு பெரிதும் பயனளித்துள்ளது. மேலும், முன்பதிவு கவுன்டர்களிலும் கூட்டம் குறைந்துள்ளது.
வெயிட்டிங் லிஸ்ட் விதியை மாற்றிய ரயில்வே:
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். எனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 1000 கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேசிய போக்குவரத்து நிறுவனமான இந்தியன் ரயில்வே, காத்திருப்போர் பட்டியலை பூஜ்யமாக குறைக்க மற்றும் ரயில் சேவைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், அடுத்த சில ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புக்கு புதிய ரயில்களை வாங்க திட்டமிட்டுள்ளது.
இந்தியன் ரயில்வே தற்போது தினமும் 10,754 ரயில் பயணங்களை இயக்கி வருகிறது. கோவிட்-19க்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுட்டால் தற்போது ரயில்வே கூடுதலாக 568 ரயில் பயணங்களை இயக்கி வருகிறது. மேலும் காத்திருப்போர் பட்டியலை பூஜ்ஜியமாக குறைக்க மேலும் 3,000 ரயில் பயணங்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
TTE உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்:
நீங்கள் ரயிலில் பயணம் செய்யும்போது, TTE உங்கள் டிக்கெட்டை சரிபார்க்க வருகிறார். ஒரு நபர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால், அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் இரவில் பயணிகள் ரயிலில் தூங்கும் போது கூட TTE (பயண டிக்கெட் பரிசோதகர்) சென்று டிக்கெட்டுகளை சரிபார்ப்பார். இதனால் மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதற்காக டிடிஇ இரவு 10:00 மணிக்கு மேல் டிக்கெட் சரிபார்க்க முடியாது என்று ரயில்வே இப்போது புதிய விதியை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஒரு பயணி மற்றொரு பயணியைப் பற்றி புகார் செய்தால், இரயில் ஊழியர்கள் இரவில் இருக்க வேண்டும். பயணிகள் தங்கள் ரயில்களைத் தவறவிட்டால், TTE மற்ற பயணிகளுக்கு ஒரு மணி நேரம் கழித்து அல்லது அடுத்த இரண்டு நிலையங்களைக் கடந்த பிறகு மட்டுமே தங்கள் இருக்கைகளை ஒதுக்க முடியும்.
மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த மிகப்பெரிய அப்டேட் வந்தாச்சி.. உடனே தெரிஞ்சிக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ