IRCTC New Rules: நீங்கள் ரயிலில் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால் சில அடிப்படை விதிகளை தெரிந்து வைத்து இருப்பது அவசியம்.  ரயிலில் பயணம் செய்யும் போது சக பயணிகளால் சில சமயங்களில் எரிச்சல் ஏற்படலாம்.  சக பயணிகள் தொந்தரவு தரும்படி பேசுவது, இரவு முழுவதும் விளக்குகளை ஆன் செய்வது, ஸ்பீக்கரில் சத்தமாக பாட்டுக்கேட்பது போன்ற பொதுவான பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டு இருக்கலாம். இந்த விதிகளை நீங்கள் தெரிந்து கொண்டால் இனி இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக மாடீர்கள்.  இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) இரவில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.  அனைத்து பயணிகளின் வசதியை உறுதி செய்யும் வகையில் இந்த புதிய வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த வழிகாட்டுதல்களை மனதில் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Budget 2024: ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு அட்டகாசமான செய்தி.. அதிகரிக்கிறதா கவரேஜ்?


ரயிலில் இரவு பயணம் செய்ய விதிகள்


ரயிலில் பயணிக்கும் எந்த ஒரு பயணியும் ரயிலில் இருக்கும் போது, மொபைல் போனில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சத்தமாகப் பேச கூடாது.  ரயிலில் பயணிக்கும் போது இயர்போன் இல்லாமல் அதிக சப்தமாக பாட்டு கேட்க கூடாது.  இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் விளக்குகளை ஆன் செய்ய கூடாது. இதற்கான அனுமதியும் இல்லை. அதே போல புகைபிடித்தல், மது அருந்துதல் அல்லது ரயிலில் பொதுமக்களுக்கு எதிரான எந்த ஒரு செயல்களை செய்வது ஏற்றுக்கொள்ளப்படாது.  மேலும் ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை எடுத்து செல்வது அனுமதிக்கப்படாது மற்றும் இது இந்திய ரயில்வேயின் விதிகளுக்கு எதிரானது.


ரயிலில் குழுவாக பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் ஒன்றாக உட்கார்ந்து அரட்டை அடிக்க கூடாது.  இது மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கும்.  இரயில் ஆன்லைன் சேவைகளில் இரவு 10 மணிக்கு மேல் உணவு வழங்க அனுமதிக்கப்படாது. இருப்பினும், பயணிகள் இரயிலில் இருக்கும்போது இ-கேட்டரிங் சேவைகள் மூலம் தங்கள் இரவு உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.  நடுத்தர பெர்த் பயணிகள் தங்கள் இருக்கையில் தூங்க விரும்பினால், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.  மற்ற சமயங்களில் சக பயணி விரும்பினால் மட்டுமே நீங்கள் அதனை பயன்படுத்த முடியும்.


ரயில்வே ஊழியர்களுக்கான விதிகள்


பயண டிக்கெட் பரிசோதகர் (டிடிஇ) இரவு 10 மணிக்கு மேல் வந்து பயணிகளின் டிக்கெட்டுகளை சரிபார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.  ஒரு பயணி மற்றொரு சக பயணியை பற்றி புகார் செய்தால், இரயில் ஊழியர்கள் உடனே அந்த இடத்திற்கு வர வேண்டும்.  பயணிகள் தங்கள் ரயில்களைத் தவறவிட்டால், TTE மற்ற பயணிகளுக்கு ஒரு மணி நேரம் கழித்து அல்லது அடுத்த இரண்டு நிலையங்களைக் கடந்த பிறகு மட்டுமே தங்கள் இருக்கைகளை ஒதுக்க முடியும்.  IRCTC புதிய விதிகளின்படி, இரவில் யாராவது விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.


இந்த விஷயங்களில் கவனம் தேவை


நாம் பொதுவாக ரயிலில் ஏறியவுடன் ஹெட்போனை மாட்டி கொண்டு படம் அல்லது பாட்டு கேட்க ஆரம்பித்துவிடுகிறோம்.  இருப்பினும், நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம்.  ரயிலில் திருட்டை தடுக்க அனைத்துப் பொருட்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். மேலும் ரயிலில் சக பயணிகள் உங்களிடம் பேசலாம்.  இருப்பினும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் சொல்ல வேண்டாம். நீங்கள் அடிக்கடி தனியாகப் பயணம் செய்யும் பெண்ணாக இருந்தால், ரயிலில் பயணிக்கும்போது பாதுகாப்பற்றதாக உணர்ந்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தால் அவதிப்பட்டாலோ ரயில் டிக்கெட் பரிசோதகரை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ