IRCTC News: ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவை வழங்கும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC தரப்பிலிருந்து அதன் iMudra செயலி வழியாக டிஜிட்டல் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், 2000 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிப்ரவரி 28 வரை இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக, வாடிக்கையாளர் குறைந்தது 5000 ரூபாய் அல்லது அதற்கு மேல் செலவிட வேண்டியிருக்கும்.


2000 ரூபாய் வரை கேஷ்பேக்


IRCTC iMudra செயலியின் விசா (VISA) அல்லது ருபே கார்ட் (RuPay) மூலம் செய்யப்படும் பரிவர்த்தனையில் 2000 ரூபாய் வரையிலான கேஷ்பேக் வசதி கிடைக்கிறது.


IRCTC i-Mudra ட்வீட் மூலம் இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளது. இந்த ட்வீட்டில், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமான ஐ-முத்ரா செயலியின் விசா அல்லது ரூபே கார்டு (VISA / RuPay) மூலம் ரூ .5000 க்கு மேல் ஷாப்பிங் செய்தால், அவர்கள் ரூ .2000 வரை கேஷ்பேக் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.


ALSO READ: IRCTC-யில் இனி பேருந்துக்கும் ஆன்லைன் புக்கிங் செய்யலாம்: மார்ச் முதல் ஆரம்பம்


பிப்ரவரி 28 வரை சலுகை உள்ளது


IRCTC-யின் இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு பிப்ரவரி 28 வரை உள்ளது. நீங்களும் கேஷ்பேக் பெற விரும்பினால், ஷாப்பிங் செய்யும்போது ஐ-முத்ரா செயலியின் விசா அல்லது ரூபே (RuPay) அட்டை ஷாப்பிங் செய்யத் தொடங்குங்கள். ஃபெடரல் வங்கியுடன் இணைந்து IRCTC இந்த அட்டையை அறிமுகப்படுத்தியது. இந்த கார்டில், நீங்கள் டெபிட் கார்டு, UPI அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணத்தை போடலாம்.


பணத்தை கார்டில் போடுவது எப்படி?


IRCTC ஐ-முத்ரா வாலட்டில் பணம் போட, UPI, டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாம். பணத்தைச் சேர்க்க, உங்கள் ஐமுத்ரா செயலியில் உள்ள ‘Add Money’ ஆப்ஷனை கிளிக் செய்து, தொகையைத் தேர்ந்தெடுத்து அதை உங்கள் பணப்பையில் ஏற்றும் செயல்முறையைத் தொடரவும்.


ஐ-முத்ரா செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளன


ஐ-முத்ரா (i-Mudra) செயலியின் மூலம், நீங்கள் தண்ணீர் பில்லுக்கான கட்டணத்தையும் செலுத்தாம். இது தவிர, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங் செய்யலாம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பணம் அனுப்பலாம். இந்த வசதி மூலம் நீங்கள் ஏடிஎம்களில் இருந்து பணத்தையும் எடுக்கலாம். ஆனால் அதற்கு IRCTC முத்ராவில் பதிவுபெற வேண்டியது அவசியமாகும். இந்த செயலியில் பயனர்கள் டேப் அண்ட் பே (Tap & Pay) வசதியைப் பெறுகிறார்கள்.


ALSO READ: மீண்டும் தொடங்குகிறது IRCTC இ-கேட்டரிங் சேவை; உணவை ஆர்டர் செய்வது எப்படி..!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR