கோவா நகரினை வெறும் 400 ரூபாயில் சுற்றி பார்க்கும் வகையில் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'HOP ON HOP OFF GOA BY BUS' போருந்து சலுகையின் மூலம் தனி நபர் ஒருவர் கோவாவினை ரூ.400 செலவில் சுற்றி பார்கலாம் என தெரிகிறது. இந்த திட்டத்தின் படி தனி நபர் ஒருவர் வடக்கு கோவா (அ) தெற்கு கோவாவினை ரூ.400-க்கு ஒருநாள் பயணமாக சுற்றிப்பார்கலாம் எனவும், இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள நபர் ஒருவருக்கு ரூ.700 செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டள்ளது.


கோவா-வினை சுற்றுலா சிறப்பு பேருந்து மூலம் பயணிகள் கண்டு ரசிக்க இந்த அதிரடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி., தெற்கு கோவா திட்டத்தில் பயணிப்பவர்கள் டோனா பவுலா, கோவா அறிவியல் அருங்காட்சியகம், மீராமர் பீச், காலா அகாடமி, பகவான் மகவேர் கார்டன், பனாஜி மார்க்கெட், கேசினோ பாயிண்ட், நதி படகு குரூஸ் & பழைய கோவா (பசிலிக்கா ஆஃப் பாம் ஜீசஸ் (புனித பிரான்சிஸ் சேவியர்)), சீ கதீட்ரல், செயின்ட் கேத்தரின் சாப்பல், வைசிராய், ஏ.எஸ்.ஐ அருங்காட்சியகம் மற்றும் செயின்ட் அகஸ்டின்). 


வட கோவாவிற்கு வருகை தரும் பயணிகள் ஆகுண்டா கோட்டை, சின்கர்னிம் பீச் / கோட்டை, கொன்டோலிம் பீச், செயின்ட் ஆந்தோனி சேப்பல், செயின்ட் அலெக்ஸ் சர்ச், கலங்கூட் பீச், பாகா பீச், அஞ்சூனா கடற்கரை, சாப்போரா கோட்டை மற்றும் வாகக்டர் பீச் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். 


இந்த சலுகை பயணத்தை முன்பதிவு செய்யும் நபர்கள், தங்களது பயணத்திற்கு 4 நாள் முன்னதாக முன்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் 4 நாள்களுக்கு முன்னதாக குறிப்பிட்ட நாளின் பயணத்திற்கான முன்பதிவு முடக்கப்படும் எனவும் IRCTC குறிப்பிட்டுள்ளது. முன்பதிவு தகவலின் அடிப்படையில், சுற்றுலா பயணத்தில் பங்கேற்கும் நபர்களின் பட்டியல், பயண விவரங்கள் மின்னஞ்சல் வழியாக பயனிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.


Read in English