IRCTC Refund Rules: டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வராது? புதிய ரயில்வே விதி?
IRCTC: சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, ரயில் டிக்கெட்டுகளை ரத்துசெய்தால் பணத்தைத் திரும்பப் பெற TDR மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ரயில்வே கூறுகிறது.
IRCTC Refund Rules: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) படி, சார்ட் ரெடியான பிறகு இணைய டிக்கெட்டை ரத்து செய்ய முடியாது. இதுபோன்ற சூழ்நிலையில், பயனர்கள் ஆன்லைனில் TDR தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும் IRCTC வழங்கும் கண்காணிப்பு சேவையின் மூலம் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை கண்காணிக்க வேண்டும். ரயில்வேயின் விதிகளின்படி டிடிஆர் (TDR - Ticket Deposit Receipt) தாக்கல் செய்யலாம். பெரும்பாலான மக்கள் ரயில்வேயில் பயணம் செய்ய விரும்புகின்றனர். ரயில்வே இந்தியாவின் போக்குவரத்துக்கு முதுகெலும்பு என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும், நீங்கள் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட்டைப் பெறுவதற்கு நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும், ஆனாலும் பலருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை.
உங்கள் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்ட பின், சார்ட் தயாரிக்கப்பட்டவுடன் அதை ரத்து செய்ய முடியாது. ஆனால் நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவரா இல்லையா என்பதைச் சரிபார்க்க, டிக்கெட் டெபாசிட் ரசீதை (TDR) தாக்கல் செய்யலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பணத்தைத் திரும்பப் பெறுவது மண்டல ரயில்வே கோட்டத்தையே சார்ந்திருக்கும். TDR கோரிக்கையை தாக்கல் செய்வதற்கான காரணத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா இல்லையா மற்றும் நீங்கள் எவ்வளவு பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள் என்பது மண்டல ரயில்வே அலுவலகத்தைப் பொறுத்தது.
ரயில்வே செல்வது என்ன?
இது குறித்து இந்திய ரயில்வே, “பயனர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளில் ஆன்லைன் TDR தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் (சார்ட் தயாரித்த பிறகு டிக்கெட்டுகளை ரத்து செய்தல்) மற்றும் IRCTC வழங்கும் கண்காணிப்பு சேவையின் மூலம் பணத்தைத் திரும்பப்பெறும் நிலையைக் கண்காணிக்க வேண்டும். ரயில்வே விதிகளின்படி டிடிஆர் தாக்கல் செய்யலாம். இருப்பினும், ஏற்றுக்கொள்வது/நிராகரிப்பது அல்லது பணத்தைத் திரும்பப்பெறுவது தொடர்பான முடிவு இந்திய ரயில்வேயின் தற்போதைய பணத்தைத் திரும்பப்பெறும் விதிகளின்படி சம்பந்தப்பட்ட மண்டல ரயில்வே எடுக்கும், ஐஆர்சிடிசி அல்ல" என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை ரத்து செய்த பின்னரே ஆன்லைனில் TDRஐப் பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இ-டிக்கெட்டுக்கு ஆன்லைனில் ரத்துசெய்துவிட்டு TDRஐப் பதிவு செய்யலாம். ரயில்வே கவுன்டரில் உங்கள் டிக்கெட்டை நீங்கள் வாங்கியிருந்தால், முதலில் உங்கள் டிக்கெட்டை ரத்துசெய்துவிட்டு TDRஐப் பதிவு செய்ய வேண்டும். உங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய, அருகிலுள்ள ரயில்வே டிக்கெட் முன்பதிவு கவுண்டருக்கு செல்லலாம். "ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்யாவிட்டாலோ அல்லது ஆன்லைனில் TDR தாக்கல் செய்யாவிட்டாலோ உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளில் பணத்தைத் திரும்பப் பெற முடியாது. அதேசமயம், ஆர்ஏசி டிக்கெட்டுகளில், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு டிடிஆரை தாக்கல் செய்ய வேண்டும்" IRCTC மேலும் கூறியது. சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, ரயில் டிக்கெட்டுகளை ரத்துசெய்தால் பணத்தைத் திரும்பப் பெற TDR மட்டுமே பயன்படுத்த வேண்டும். சார்ட் தயாரிப்பதற்கு முன் ரயில்வே டிக்கெட்டை ரத்து செய்தால், டிடிஆர் தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
மேலும் படிக்க | மாதம் ₹210 போதும்... ஆயுள் முழுவதும் ₹5000 பென்ஷன் தரும் அடல் பென்ஷன் திட்டம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ