அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கோலம் போடலாமா?
வீட்டு வாசலில் நாம் அமாவாசை தினத்தில் கோலம் போடலாமா? என்ற கேள்விக்கான பதில் இதோ...
வீட்டு வாசலில் நாம் அமாவாசை தினத்தில் கோலம் போடலாமா? என்ற கேள்விக்கான பதில் இதோ...
வீடு என்பது லட்சுமி வசிக்கும் இடம். இதனால் அவளுக்கு கிரகலட்சுமி என்றும் பெயர் உண்டு. வீட்டில் வாஸ்து புருஷனும் (Vastu Purushan) உறைந்திருக்கிறார். அதன் எட்டு மூலைகளிலும் (eight corners) திக் பாலகர்கள் உண்டு. எண்ணற்ற இறையுருவங்களைக்கொண்ட பூஜையறையுடன் திகழும் வீடு கோயிலுக்குச் சமம்.
கடவுளை வழிபடுவதுடன், அவருடன் சேர்ந்து வாழ்கி றோம். கடவுள் இருப்பிட மான வீட்டை, அனுதினமும் காலையில் (Daily Morning) சுத்தம் செய்து வாசலில் கோலம் போட வேண்டும். இது வழிபாட்டில் ஒன்று.
பசுஞ்சாணியால் சுத்தம் செய்து கோலம் (Rangoli) போட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது தர்ம சாஸ்திரம் (கோமயேனோபலிப்ய, ரங்கவல்யாத் யலம் கிருத்ய).
ALSO READ | பூர்வ ஜென்ம பலன் என்பது நம்பக்கூடியதா? - இதோ உங்களுக்கான பதில்..
கோலத்துக்கு ரங்கவல்லீ என்று பெயர். வட நாட்டவர் அதை ரங்கோலி என்பர். வீட்டுக்குள் உறைந்திருக்கும் இறை பூஜையின் ஆரம்பமே கோலம்தான். அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியிருக்கும் ஆசை வந்தபிறகு, குடியிருக்கும் வீட்டை (ஃப்ளாட்), தங்கும் விடுதிகளுக்கு (போர்டிங் அண்டு லாட்ஜிங்) ஒப்பாகவே பார்க்கிறோம். வீட்டில் மிளிரும் தெய்விகத்தை மறந்துவிட்டோம்.
அமாவாசை - முன்னோர் ஆராதனை நாள். அது தினம் தினம் வராது. பூஜை என்பது தினம் தினம் உண்டு. இறை ஆராதனையும் முன்னோர் ஆராதனையும் ஒருசேர வந்தால் முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். அமாவாசை அன்று முன்னோர் ஆராதனைக்கு முதலிடம் அளிப்பதால் கோலம் போடு வதை தள்ளிப்போட வேண் டும். இது, முன்னோருக்கு நாம் அளிக்கும் பெருமை.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR