புதுடெல்லி: சாண்டா கிளாஸ் உண்மையானவரா? கூகுளில் (Google) 11 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கேள்விக்கு விடை தேடியிருக்கின்றனர். என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள் ...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாண்டா கிளாஸ் (Santa Claus) ஒரு கற்பனையான பாத்திரம் (fictional character) என்பதை இணையத் தேடலில் சுமார் 1.1 மில்லியன் குழந்தைகள் கற்கிறார்கள் என்று இணையத்தில் வெளியான அண்மை அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.  


இந்தத் தேடலின் போது தோன்றும் முதல் கட்டுரையில், "வயது வந்த முதியவராக நாம் நினைக்கும் சாண்டா கிளாஸ் உண்மையானவர் அல்ல என்பது நமக்குத் தெரியும்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. கூகுளில் (Google) 'இஸ் சாண்டா ரியல்' ('Is Santa Real') என்பதைத் தேடும்போது, ​​குவார்ட்ஸின் முதல் கட்டுரை தோன்றுகிறது, இது கேள்விக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பெற்றோருக்கு அறிவுறுத்துகிறது.  


இந்த கட்டுரையின் முதல் வாக்கியம் 'சாண்டா கிளாஸ் (Santa Claus) உண்மையானவர் அல்ல என்பதை ஒரு வயது வந்தவராக நாங்கள் அறிவோம்' என்று இருக்கிறது.


Also Read | Whatsapp Stickers மூலம் அழகாய் அனுப்பலாம் கிறிஸ்துமஸ் வாழ்த்து


டொமைன் மற்றும் உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையின் அடிப்படையில் கூகுள் குவார்ட்ஸின் கட்டுரை முதலிடத்தில் உள்ளது என்று தொழில்நுட்ப தேடுபொறி  இயக்குனர் ஸ்டீபன் கென்ரைட் கூறினார்.


தேடல் தரவுகளின்படி, சராசரியாக 1,86900 பேர் 'சாந்தாவின் வயது எவ்வளவு' என்றும் 1,82,300 பேர் 'வேர் இஸ் நார்த் பொல்' (Where's the North Pol) என்றும் தேடியிருக்கின்றனர். இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்தம் கிறிதுமஸாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதியன்று கிறிஸ்துமஸ் (கொண்டாடப்படுகிறது.


கிறிஸ்துமஸ் (Christmas) பண்டிகைக்கு முதல் நாளான இன்று டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு  வழிபாடு நடத்துவார்கள்.  வீடுகளும், தேவாலயங்களும் நாணல் என்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு, அவரை ஈன்றெடுத்த அன்னை மேரி, யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் என அலங்கரிப்பார்கள்.


Also Read | Christmas: யானையில் சவாரி செய்து பரிசுகளை விநியோகிக்கும் Santa Claus! 


இயேசு கிறிஸ்து பிறந்ததை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் சாண்டா கிளாஸ் போல் வேடமணிந்த பலரும் அனைவருக்கும் பரிசுப் பொருட்களையும் (Gifts), இனிப்புகளையும் வழங்கி மகிழ்வார்கள். 


கிறிஸ்துமஸை (Christmas) முன்னிட்டு சாண்டா கிளாஸ் கையில் இருந்து பரிசு பெறுவதை அனைவரும் விரும்புகின்றனர். குழந்தைகள் தூங்கும்போது, தலையணைக்கு அடியில் பரிசுப் பொருட்களை வைக்கும் பெற்றோர் சாண்டா வந்து பரிசு வைத்து விட்டு போயிருக்கிறது என்று சொல்வதை பலரும் கேட்டிருக்கலாம்.


Also Read | கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களில் Happyக்கு பதிலாக Merry Christmas என்று வாழ்த்துவதன் காரணம் தெரியுமா?


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR