100வது செயற்கைகோளை விண்ணில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் 100வது செயற்கைக்கோள் இஸ்ரோவால் இன்று விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி-38 மூலம் இந்த செயற்கைகோள் ஏவப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் இன்று விண்ணில் பாய்ந்த்தது. இந்த ராக்கெட் கார்டோசாட் -2 செயற்கைக்கோளைத் தாங்கிச்செல்லும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது இந்தியாவின் 100வது செயற்கைகோள் ஆகும்.


இந்த பிஎஸ்எல்வி சி-38 செயற்கைகோள் இன்று காலை 9:28 மணிக்கு ஏவப்பட்டது. இதற்கான கவுண்டவுன் நேற்று அதிகாலையே துவங்கிவிட்டது.


பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட்டில் மூலம் கனடா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியாமற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டது.