.புதுடெல்லி: எல்.ஐ.சி பாலிசியுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது, ஆன்லைனில் பான் அட்டையை உங்கள் பாலிசியுடன் எப்படி இணைப்பது தெரியுமா? மிகவும் சுலபமாக இணைத்துவிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்.ஐ.சி பாலிசியுடன் (LIC policy) பான் அட்டையை நேரடியாக இணைப்பதற்கு படிப்படியான வழிகாட்டி விவரங்கள் உங்களுக்காக:


எல்.ஐ.சி பாலிசியுடன் பான் (PAN) அட்டையை இணைப்பதற்கு முன்னதாக, உங்களிடம் உள்ள அனைத்து பாலிசிகளின் பட்டியலை தயாராக வைத்துக் கொள்ளவும். அதோடு, உங்கள் பான் அட்டையையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.


Also Read | Aadhaar Card News: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்க இந்த வழிமுறைகள் உங்களுக்கு உதவும்


எல்.ஐ.சி இணையதளத்தில் உள்ள "ஆன்லைன் சேவைகள்" பிரிவில், நீங்கள் "ஆன்லைன் பான் பதிவு" விருப்பத்தை கிளிக் செய்யவும்.


இணைக்கும்போது, பாலிசியில் நீங்கள் பதிந்திருக்கும் மொபைல் எண்ணுக்கு OTP எண்ணை எல்.ஐ.சி அனுப்பும் என்பதால் அந்த மொபைல் எண் செயலில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 


முதலில், நீங்கள் https://licindia.in/ இணையதளத்திற்கு செல்லவும்.


Also Read | LPG Gas Subsidy முக்கிய செய்தி: வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை செய்து முடிக்கலாம்


1.எல்.ஐ.சியின் இந்த அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் முகப்புப்பக்கத்தில், நீங்கள் “ஆன்லைன் சேவைகளை” தேர்ந்தெடுக்க வேண்டும்.
2.“ஆன்லைன் சேவைகள்” பிரிவில், “ஆன்லைன் பான் பதிவு” விருப்பத்தை கிளிக் செய்யவும்.
3,கிளிக் செய்தவுடன் “எல்.ஐ.சி பாலிசியுடன் பான் இணைக்கவும்” என்ற பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
4. நீங்கள் அங்கு தேவையான சில விவரங்களை உள்ளிட வேண்டும் - பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் ஐடி, பான் எண், பான்அட்டையில் உள்ள முழு பெயர், ஆதார் அட்டையில் இருக்கும் மொபைல் எண், பாலிசி எண்.
5.தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு டிக் செய்ய வேண்டும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும்.
6. “Get OTP” என்பதை கிளிக் செய்ய வேண்டும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
7. அதன்பிறகு “உங்கள் விவரங்களைச் சரிபார்க்கவும்” பக்கத்தில் இருப்பீர்கள், அங்கு, உங்கள் மொபைலுக்கு வந்த OTP எண்ணை உள்ளிட வேண்டும்.
உங்கள் சரிபார்ப்பு வெற்றிகரமாக இருந்தால், “பாலிசியுடன் இணைப்பு பான் - ஒப்புதல்” என்ற பக்கம் தோன்றும்.


இறுதியாக, “பான் பதிவுக்கான கோரிக்கை பெறப்பட்டது” என்ற செய்தி திரையில் தோன்றும். இப்போது உங்கள் எல்.ஐ.சி பாலிசியுடன் பான் எண் சுலபமாக சேர்க்கப்பட்டுவிட்டது.


Also Read | Electricity Tariff System: மின் கட்டணம் மாதந்தோறும் செலுத்தினால் குறையுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR