LPG Gas Subsidy முக்கிய செய்தி: வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை செய்து முடிக்கலாம்

எல்பிஜி மானியம் அதாவது எல்பிஜி சமையல் எரிவாயு மானியம் உங்கள் கணக்கில் வருகிறதா இல்லையா? இது உங்களுக்குத் தெரியாவிட்டால், இதை எப்படி தெரிந்து கொள்வது என்று இங்கே பார்க்கலாம். இப்போது வீட்டில் இருந்தபடியே இதை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 12, 2021, 01:28 PM IST
  • எல்பிஜி மானியம் உங்கள் கணக்கில் வருகிறதா இல்லையா என்பதை நீங்கள் எளிதாக அறிய முடியும்.
  • உங்கள் மானியம் ஏன் நிறுத்தப்பட்டது என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும்.
  • எல்பிஜி மீதான மானியம் நிறுத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் ஆதார் இணைப்பு செய்யப்படாததுதான்.
LPG Gas Subsidy முக்கிய செய்தி: வீட்டிலிருந்தபடியே இந்த வேலையை செய்து முடிக்கலாம் title=

LPG Gas Subsidy: எல்பிஜி மானியம் அதாவது எல்பிஜி சமையல் எரிவாயு மானியம் (LPG Gas Subsidy) உங்கள் கணக்கில் வருகிறதா இல்லையா? இது உங்களுக்குத் தெரியாவிட்டால், இதை எப்படி தெரிந்து கொள்வது என்று இங்கே பார்க்கலாம். இப்போது வீட்டில் இருந்தபடியே இதை நீங்கள் எளிதாக தெரிந்துகொள்ளலாம். 

நிமிடங்களில் இந்த வேலையை எவ்வாறு எளிதாக செய்து முடிக்கலாம் என்பதை இந்த பதிவில் காணலாம். மேலும், எல்.பி.ஜி மானியம் (LPG Gas Subsidy Update) உங்கள் கணக்கில் வருகிறதா இல்லையா என்பதையும் நீங்கள் எளிதாக அறிய முடியும்.

இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி நீங்கள் மானியத் தகவலைப் பெறலாம்:

1. முதலில் www.mylpg.in என்ற வலைத்தளத்தை திறக்கவும்.

2. இப்போது உங்களுக்கு ஸ்க்ரீனின் வலது புறத்தில் எரிவாயு நிறுவனங்களின் எரிவாயு சிலிண்டர்களின் (LPG Cylinder) புகைப்படத்தைக் காண்பீர்கள்.

3. இங்கே நீங்கள் உங்கள் சேவை எரிவாயு சிலிண்டர் வழங்குநரின் புகைப்படத்தைக் கிளிக் செய்ய வேண்டும். 

4. இதற்குப் பிறகு ஒரு புதிய விண்டோ திரையில் திறக்கும். இது உங்கள் எரிவாயு சேவை வழங்குநருடையதாக இருக்கும்.

5. இப்போது வலதுபுறத்தில் மேல் பக்கம் சைன் இன் மற்றும் புதிய பயனர் ஆப்ச்ஷனை டேப் செய்யவும்.

ALSO READ: BPCL தனியார் மயமாக்கல் விவகாரம்; LPG மானியம் நிறுத்தப்படுமா..!!

6. உங்களுக்கு ஏற்கனவே இதில் ஒரு ஐ.டி இருந்தால், அதன் மூலம் லாக் இன் செய்யவும். உங்களுக்கு இதில் ஐ.டி இல்லையென்றால், ‘நியூ யூசர்’-ல் டேப் செய்து வலைத்தளத்தில் லாக் இன் செய்யவும். 

7. இப்போது உங்கள் முன் புதிய விண்டோ திறக்கும். இதில், வலது பக்கத்தில் ‘வியூ சிலிண்டர் புக்கிங் ஹிஸ்டரி’- ஐ கிளிக் செய்யவும். 

8. உங்களுக்கு எந்த சிலிண்டருக்கு எவ்வளவு மானியம் வழங்கப்பட்டது, எப்போது வழங்கப்பட்டது ஆகிய தகவல்கள் இங்கே கிடைக்கும்.

9. இதனுடன், நீங்கள் எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்திருந்தால், உங்களுக்கு மானியப் பணம் கிடைக்காமல் இருந்தால், ஃபீட்பேக் என்ற பட்டனில் கிளிக் செய்யவும். 

10. இப்போது நீங்கள் மானியப் (LPG Subsidy) பணம் கிடைக்காததற்கான புகாரையும் தாக்கல் செய்யலாம்.

11. இது தவிர, 18002333555 என்ற கட்டணமில்லா எண்ணை அழைத்து புகாரை பதிவு செய்யலாம்.

மானியம் ஏன் நிறுத்தப்படுகிறது?

உங்கள் மானியம் (LPG Gas Subsidy Status) ஏன் நிறுத்தப்பட்டது என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும். எல்பிஜி மீதான மானியம் நிறுத்தப்படுவதற்கு மிகப்பெரிய காரணம் ஆதார் இணைப்பு (Aadhaar Card Link) செய்யப்படாததுதான். ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் இருப்பவார்களுக்கும் மானியம் வழங்கப்படுவதில்லை.

ALSO READ: LPG PRICE HIKE: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News