இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், ஜூன் 30 வரை அரசு இந்த மெகா சலுகை கிடைக்கும்
Ration Card Rules: தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கும் தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள், இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு இலவச ரேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: உங்களுக்கும் ரேஷன் கார்டு இருந்து, மாதந்தோறும் அரசிடம் இருந்து இலவச ரேஷன் பெற்றுக்கொண்டு இருந்தால், தற்போது ஒரு மிகப் பெரிய அப்டேட் வெளிவந்துள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு ரேஷன் கார்டையும் மக்கள் தங்களின் ஆதாருடன் இணைக்க அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு, மார்ச் 31, 2023 கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கும் தேதியை ஜூன் 30, 2023 வரை அரசு நீட்டித்துள்ளது. அந்தவகையில் இந்த தேதிக்குள், இந்த இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு நீங்கள் இலவச ரேஷன் பெரும் பலனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
காலக்கெடுவை நீட்டிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கும் தேதியை நீட்டித்து உணவு மற்றும் பொது விநியோகத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் படி ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைத்த பிறகு, தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் பங்கு உணவு தானியங்கள் கிடைக்கிறதா இல்லையா என்பதை எளிதாக உறுதிப்படுத்த முடியும் என்று அரசாங்கத்தின் தரப்பில் கூறப்படுகிறது.
இரண்டாவது முறையாக காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
இதனிடையே மார்ச் 31, 2023க்கு முன்னதாக, ஆதார் மற்றும் ரேஷன் கார்டை இணைக்க டிசம்பர் 31, 2022 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. தற்போது காலக்கெடு நீட்டிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அதுமட்டுமின்றி ரேஷன் கார்டை ஒரே நாடு-ஒரே ரேஷன் என அரசு அறிவித்ததில் இருந்தே, ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது குறித்து அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆதார்-ரேஷன் கார்டை எவ்வாறு இணைப்பது
உங்கள் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பொது விநியோக அமைப்பு (PDS) போர்ட்டலுக்குச் செல்லவும்.
ஆக்டிவ் கார்டுடன் ஆதாரை இணைக்கவும்.
உங்கள் ரேஷன் கார்டு எண்ணைத் தொடர்ந்து ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
தொடரவும்/சமர்ப்பிக்கவும் பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது உங்கள் மொபைல் போனில் OTP அனுப்படும்.
ஆதார் ரேஷன் இணைப்பு பக்கத்தில் OTP ஐ உள்ளிடவும், அதற்கான உங்கள் கோரிக்கை இப்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
செயல்முறை முடிந்ததும், இது தொடர்பான தகவல் உங்களின் போனில் எஸ்எம்எஸ் அனுப்படும்.
மேலும் படிக்க | ரயில் பயணிகளின் கவனத்திற்கு..டிக்கெட்டில் இவ்ளோ விஷயம் இருக்கா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ