இந்தியன் ரயில்வே: அடிக்கடி ரயிலில் பயணம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இது உங்களுக்கு ஒரு முக்கியமான பதிவாக இருக்கும். ரயில் பயணிகளுக்கு நிவாரணம் அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. ரயில் விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே வாரியம் சார்பில் பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில் விபத்தில் மரணம் அல்லது காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரயில்வே 10 மடங்கு உயர்த்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை தற்போது ரயில்வே அதிகரித்துள்ள நிலையில், இதற்கு முன், கடந்த 2012 மற்றும் 2013 -இல் இழப்பீடு தொகை மாற்றப்பட்டது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரயில்வேயின் மாற்றம், தீவிரமான மற்றும் சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கும் பொருந்தும். புதிய மாற்றத்தின்படி, விபத்துகளில் துரதிஷ்டவசமாக பயணி இறந்தால், அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படும் நிவாரண உதவி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பலத்த காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


புதிய விதி செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வந்தது


ரயில் விபத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டால் வழங்கப்படும் 5000 ரூபாய் உதவித் தொகை 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் விபத்துகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பயணிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை மார்க்கமாக பயணிப்பவர்களுக்கான உதவித் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் பணியில் இருக்கும் லெவல் க்ராசிங்கில் விபத்துக்குள்ளானவர்களுக்கும் இந்த விதி பொருந்தும். இந்த விதியானது செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அற்புதமான வாய்ப்பு தந்த ரயில்வே.. மிஸ் பண்ணிடாதீங்க


இப்போது ரூ. 5 லட்சம் உதவி வழங்கப்படும்


ரயில்வேயின் புதிய விதிகளின்படி, ரயில் மற்றும் ஆளில்லா லெவல் கிராசிங் விபத்துக்களில் இறக்கும் பயணிகளின் குடும்பத்திற்கு இப்போது 5 லட்சம் ரூபாய் உதவி வழங்கப்படும். அதேபோல், பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டால், அவருக்கு தற்போது ரூ. 2.5 லட்சம் வழங்கப்படும். அதேபோல், சிறிய காயம் அடைந்த பயணிகளுக்கு இனி ரூ. 50,000 வழங்கப்படும். முன்னதாக, இத்தொகை இறந்தவர்களுக்கு ரூ. 50,000, பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25,000, மிதமான காயங்களுக்கு ரூ. 5,000 என இருந்தது.


விரும்பத்தகாத சம்பவங்களில் தீவிரவாத தாக்குதல், வன்முறை தாக்குதல் மற்றும் ரயிலில் கொள்ளை போன்ற சம்பவங்கள் அடங்கும் என ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதேபோல், ரயில் விபத்து ஏற்பட்டால், பலத்த காயம் அடைந்தவர்கள் 30 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், கூடுதல் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 நாட்கள் முடிவடையும்போதோ அல்லது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட தேதியிலோ, எதுவாக முதலில் வந்தாலும், தினமும் ரூ. 3,000 அளிக்கப்படும். 


இந்தியன் ரயில்வே


இந்தியன் ரயில்வே நம் நாட்டு மக்களின் போக்குவரத்தின் உயிர் நாடியாக இருந்து வருகிறது. மக்கள் தொகை அதிகம் உள்ள நமது நாட்டில், மக்களின் போக்குவரத்தை பொறுத்தவரையில், ரயில்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரயில்வே பல வித வசதிகளை செய்கிறது. அவ்வப்போது பல புதிய விதிகள் இயற்றப்படுகின்றன. சில விதிகள் மாற்றப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகளுக்கு சிறப்பு நிபந்தனைகளின் கீழ் சிறப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன.  


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு செம என்ஜாய்மெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ