மூத்த குடிமக்களுக்கு செம என்ஜாய்மெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே

IRCTC Tour Package: கயா, பூரி, கங்காசாகர் மற்றும் வைத்தியநாதர் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்ல IRCTC உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த பேக்கேஜின் கீழ் முன்பதிவு செய்தால், பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 18, 2023, 12:18 PM IST
  • இந்த ரயில் பயண தொகுப்பு 8 இரவுகள் மற்றும் 9 பகல்களுக்கானது.
  • இந்த பேக்கேஜ் இந்தூரில் இருந்து தொடங்கும்.
  • பேக்கேஜ் கட்டணம் ஒரு நபருக்கு ₹14,950 முதல் தொடங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு செம என்ஜாய்மெண்ட்.. ஜாக்பாட் அறிவிப்பு வெளியிட்ட ரயில்வே title=

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: உங்கள் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் பூரி, கயா போன்ற இடங்களை பார்வையிட விருமப்புகிறார்கள் என்றால் இந்த செய்தியை கட்டாயம் படியுங்கள். இந்திய ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி(IRCTC), தற்போது பூரி, கங்காசாகர், வைத்தியநாதர் கோயில் மற்றும் கயா {PURI GANGASAGAR WITH BAIDYANATH AND GAYA DARSHAN (WZBGI10)} போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு பாரத தர்ஷன் சிறப்பு ரயில்களை அடுத்த மாதம் இயக்கவுள்ளது. இந்த ரயில் லக்னோவில் இருந்து அக்டோபர் 4 ஆம் தேதி புறப்பட்டு அக்டோபர் 12 ஆம் தேதி திரும்பும். இந்த பேக்கேஜில், ஒவ்வொரு பக்தருக்கும் பயணம், தங்குமிடம், சுற்றிப்பார்த்தல் மற்றும் உணவு வசதிகள் குறைந்தபட்சம் ரூ.14,950 இல் கிடைக்கும். இந்த தொகுப்பின் கீழ், பக்தர்கள் பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் (Bharat Gaurav Tourist Train) பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இந்த டூர் பேக்கேஜின் கீழ், 8 இரவுகள் மற்றும் 9 பகல் பயணத்தில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த சிறப்பு ரயிலில், இந்தூரைத் தவிர, தேவாஸ், உஜ்ஜைன், ஷுஜல்பூர், செஹோர், ராணி கம்லாபதி, இடார்சி, ஜபல்பூர், கட்னி மற்றும் அனுப்பூர் நிலையங்களில் இருந்து பயணிகள் ஏறலாம். இந்த பேக்கேஜிற்கு, பயணிகள் ஒரு நபருக்கு ரூ.14,950 (ஸ்லீப்பர்/எகானமி வகுப்பு), ரூ.23,750 (தர்ட் ஏசி/ஸ்டெண்டர்ட் கிளாஸ்) மற்றும் ரூ.31,100 (செகண்ட் ஏசி/ஃபன்ஃபோர்ட் கிளாஸ்) தலா நபருக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | ரயில்வே வழங்கிய மாஸ் செய்தி.. மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்..  உடனே படிக்கவும்

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்:
டூர் பேக்கேஜ் பெயர்- Puri Gangasagar with Baidyanath and Gaya Darshan (WZBGI10)
டூர் மொத்தம் எத்தனை நாட்கள் நீடிக்கும் - 8 இரவுகள் மற்றும் 9 பகல்
புறப்படும் தேதி - அக்டோபர் 4, 2023
போர்டிங் பாயின்ட்ஸ்- இந்தூர், தேவாஸ், உஜ்ஜைன், ஷுஜல்பூர், செஹோர், ராணி கமலாபதி, இடார்சி, ஜபல்பூர், கட்னி மற்றும் அனுப்பூர்.
டிபோர்டிங் புள்ளிகள்- கட்னி, ஜபல்பூர், இடார்சி, ராணி கம்லாபதி, செஹோர், ஷுஜல்பூர், உஜ்ஜைன், தேவாஸ் மற்றும் இந்தூர்.
உணவுத் திட்டம் - காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு
பயண முறை- பாரத் கௌரவ் சுற்றுலா ரயில். 

இந்த இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்:
பூரி: புரி ஜெகன்நாதர் கோயில், கொனார்க் சூரியக் கோயில், லிங்கராஜர் கோயில்
கொல்கத்தா: காளிகாட் காளி கோயில் மற்றும் கங்கா சாகர்
ஜசிதிஹ்: வைத்தியநாதர் கோயில் ஜோதிர்லிங்கம் கோயில்
கயா: விஷ்ணுபாதம் கோயில் மற்றும் புத்தகயை

நீங்கள் எப்படி முன்பதிவு செய்யலாம்?
IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இது தவிர, IRCTC சுற்றுலா வசதி மையம், மண்டல அலுவலகங்கள் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இந்த பேக்கேஜ் பற்றிய கூடுதல் தகவல்களுக்கும் முன்பதிவுக்கும், நீங்கள் IRCTC இன் போபால், ஜபல்பூர் மற்றும் இந்தூர் ரயில் நிலைய அலுவலகத்தை பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:-
போபால்- 8287931729, 9321901861, 9321901862.
இந்தூர்- 0731-2522200, 8287931723, 9321901866.
ஜபல்பூர்- 0761-2998807, 9321901832, 9987931729.

மேலும் படிக்க | கடனை கொடுத்த பின்பும் வீட்டு பத்திரங்கள் கிடைக்கவில்லையா? ரிசர்வ் வங்கி புதிய ரூல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News