டபுள் பணம்.. மக்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அசத்தும் போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம்
கிசான் விகாஸ் பத்ரா யோஜனா என்பது தபால் அலுவலகத்தின் சிறப்பு திட்டங்களில் ஒன்றாகும். இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். முதிர்வு நேரத்தில், இத்திட்டத்தின் கீழ் வைப்புத்தொகையின் இரட்டிப்பு பணம் கிடைக்கும்.
தபால் அலுவலக திட்டம்: இந்திய அரசு தபால் அலுவலகம் மூலம் பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்துகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் தபால் அலுவலகம் மூலம் சிறப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் தபால் அலுவலகம் மூலம், கிசான் விகாஸ் பத்ரா, மகிளா பச்சத் பத்ரா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தொடர் வைப்புத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்), தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி), கிசான் விகாஸ் பத்ரா, தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புத் திட்டங்கள் தபால் அலுவலகம் வழங்குகிறது போன்ற பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களில் ஒன்று தான் "கிசான் விகாஸ் பத்ரா யோஜனா" (Post Office Kisan Vikas Patra Yojna) ஆகும். நாட்டின் குடிமக்கள் வெறும் 1000 ரூபாய் முதலீட்டு செய்து கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டம் நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது, தற்போது இதில் கவர்ச்சிகரமான வட்டியும் வழங்கப்படுகிறது. எனவே இந்த திட்டத்தில் முறையாக முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்க முடியும்.
தபால் அலுவலகம் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் (Post Office Kisan Vikas Patra Yojna)
"கிசான் விகாஸ் பத்ரா திட்டம்" தபால் அலுவலகம் மூலம் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இதற்கு ஒரே நேரத்தில் அதிக பணம் தேவைப்படாது. இந்த ஆண்டு முதல் இத்திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இப்போது இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதில் உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும் மற்றும் முன்பை விட குறைவான நேரத்தில் பணம் இரட்டிப்பாகும்.
மேலும் இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1000 ஆகும். அதேசமயம் அதிகபட்ச தொகை நிர்ணயிக்கப்படவில்லை. அந்தவகையில் முதலீட்டாளர்கள் தங்களின் விருப்பப்படி முதலீடு செய்துக்கொள்ளலாம். முன்னதாக இந்தத் திட்டத்தில் பணம் இரட்டிப்பாக்க 120 மாதங்கள் அதாவது 10 ஆண்டுகள் ஆகும், ஆனால் இப்போது வட்டி அதிகரிப்பால் இந்த நேரம் குறைந்துள்ளது. இப்போது உங்கள் முதலீடு 115 மாதங்களில் அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் இரட்டிப்பாகும்.
இந்நிலையில் நீங்கள் 9 ஆண்டுகள் 7 மாதங்களில் முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் இரட்டிப்பு லாபம் பெறலாம். அதாவது ஒருவர் ஒரு முறை ரூ.4 லட்சத்தை முதலீடு செய்தால், 115 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு 8 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும்.
தபால் அலுவலக திட்டமான கிசான் விகாஸ் பத்ரா யோஜனாவின் கீழ், வருமான வரிச் சட்டம் 1961 இன் பிரிவு 80C இன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தை ஒரு தபால் அலுவலகம் அல்லது வங்கியிலிருந்து மற்றொரு தபால் அலுவலகம் அல்லது வங்கிக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | குறைந்த வட்டியில் பர்சனல் லோன் வாங்க... இந்த வங்கிகள் சிறப்பான தேர்வாக இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ