Old Pension Scheme ஜாக்பாட் அப்டேட்: இந்த ஊழியர்களுக்கு இனி பழைய ஓய்வூதியத் திட்டம்!!
Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய செய்திகள்: பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக மோடி அரசால் ஒரு பெரிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அரசு ஊழியராக இருந்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இந்தச் செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆம், இப்போது நீங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யலாம்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என நாடு முழுவதும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மோடி அரசு கடந்த காலத்தில் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டது.
இந்த ஊழியர்கள் ஓபிஎஸ் -ஐ தேர்வு செய்யலாம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெறப்பட்ட புதுப்பிப்பின்படி, டிசம்பர் 22, 2003 க்கு முன் பணியில் அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். ஆனால், டிசம்பர் 22, 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்த அனைத்து ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் கிடைக்காது. அவர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெறுவார்கள். குறிப்பிட்ட சில அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யலாம்.
ஆகஸ்ட் 31 வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்யலாம்
அத்தகைய பணியாளர்களுக்கு 31 ஆகஸ்ட் 2023 வரை பழைய ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்ய கால அவகாசம் உள்ளது. இதனுடன், தகுதியான ஊழியர்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) தேர்வு செய்யாவிட்டால், அவர்களின் பெயர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தொடரும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஒரு ஊழியர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்வதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், அது அவரது கடைசி விருப்பமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் நன்மைகள் என்ன?
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அது கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர, பணவீக்க விகிதம் அதிகரிக்கும்போது, டிஏவும் அதிகரிக்கிறது. அரசு புதிய ஊதியக்குழுவை அமல்படுத்தும் சமயங்களிலும் ஓய்வூதியம் உயர்த்தப்படுகின்றது.
மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட், மீண்டும் வருமா OPS?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ