பழைய ஓய்வூதியத் திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி விட்டன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இது ஊழியர்களுக்கு சிறிய நிவாரணத்தை அளித்தது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவருவதாக அறிவித்ததிலிருந்து, புதிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) மீதான அதிருப்தி மற்ற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தேசிய ஓய்வூதியத் திட்டமான என்பிஎஸ் -ஐ மேலும் கவர்ச்சிகரமானதாக மாற்ற மத்திய அரசு யோசித்து வருகிறது.


நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. NPS ஐ எவ்வாறு மேம்படுத்துவது, அரசு ஊழியர்கள் அதிலிருந்து சிறந்த வருமானத்தை எவ்வாறு பெறுவது என்பதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்குமாறு குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு (NPS) நேரடி நிதி உதவி வழங்குவதும் அரசாங்கத்தின் யோசனையில் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | சூப்பர் செய்தி!! இந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்தின் பலன்கள்.. முன்மொழிவு அனுப்பப்பட்டது


ஆந்திரப் பிரதேசத்தின் மாதிரி பயனுள்ளதாக இருக்கும்:


ஓய்வூதியத்திற்காக ஆந்திர அரசு அறிமுகப்படுத்திய புதிய மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். அங்கு, மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி அடிப்படை சம்பளத்தில் 33 சதவீதத்திற்கு இணையான உத்தரவாத ஓய்வூதியத்தை எந்தவித விலக்குமின்றி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இது முதலில் ஏப்ரல் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.


உத்தரவாதமான குறைந்தபட்ச வருவாயை வழங்குவது பற்றி பரிசீலித்தல்


NPS இன் சந்தாதாரர்களுக்கு இந்த திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்று இதில் பணிபுரியும் அதிகாரிகள் கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்வதே இந்த முயற்சி. மறுபுறம், இந்த குறைந்தபட்ச வருமானத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை அரசாங்கம் ஈடுசெய்ய வேண்டும்.


NPS பற்றி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?


புதிய ஓய்வூதிய முறையை மேம்படுத்துவதில் நிதிச் செயலாளர் தலைமையிலான குழு கவனம் செலுத்தும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிதி வரம்புகளை கடைபிடிக்கும் போது ஊழியர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் குழு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நிதி மசோதா 2023ஐ தாக்கல் செய்தபோது, அவர், மத்திய அரசும், மாநில அரசுகளும் பின்பற்றும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார்.


தேசிய ஓய்வூதியத் திட்டம் vs புதிய ஓய்வூதியத் திட்டம்


தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS)


1. NPSல், பணியாளரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி ஆகியவற்றில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.


2. தேசிய ஓய்வூதியத் திட்டம் பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்டது. எனவே இது ஒப்பீட்டளவில் குறைவான பாதுகாப்பு கொண்டதாகக் கருதப்படுகிறது.


3. இதன் கீழ், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெற NPS நிதியில் 40% முதலீடு செய்ய வேண்டும்.


4. இந்தத் திட்டத்தில் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் இல்லை.


5. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கப்படுவதில்லை.


மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம் சூப்பர் செய்தி: ஊழியர்களுக்கு கிடைக்கும் முத்தான் 3 ஆப்ஷன்ஸ்!! விவரம் இதோ


பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)


1. இதன் கீழ், கடைசியாக வாங்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதம், ஓய்வுக்குப் பிறகு மொத்தத் தொகையுடன் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.


2. 80 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான ஏற்பாடும் உள்ளது. ஜி.பி.எஃப்-க்கான ஏற்பாடும் உள்ளது.


3. இதன் கீழ், 20 லட்சம் ரூபாய் வரை கருணைத் தொகை வழங்கப்படுகிறது.


4. இது அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படுகிறது. பணியாளரின் சம்பளத்தில் இருந்தும் பணம் கழிக்கப்படுவதில்லை.


5. ஓய்வு பெற்ற ஊழியரின் மனைவிக்கு அவர் இறந்தவுடன் ஓய்வூதியம் வழங்கும் வசதி இதில் உள்ளது. இதன் கீழ், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை டிஏவும் வழங்கப்படுகிறது. இதனால், ஓய்வூதியத் தொகை தொடர்ந்து அதிகரிக்கிறது. 


மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம் முக்கிய அப்டேட்: மீண்டும் வருகிறதா OPS? காத்திருக்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ