கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிய ஐஸ்வர்யாவையும் ஆராத்யாவையும் வரவேற்கும் Jalsa...
கொரோனாவைத் தோற்கடித்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
ஐஸ்வர்யா ராய் பச்சனின் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. கொரோனாவைத் தோற்கடித்த பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆராத்யாவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
ஜூலை 14 அன்று, ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரது மகளுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று செய்தி வந்தது. அதையடுத்து பின்னர் இருவரும் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இப்போது இருவரும் நன்றாக குணமடைந்துவிட்டார்கள். தாயும் மகளூம் மும்பையின் தங்களுடைய வீட்டிற்கு திரும்புகின்றனர். அமிதாப் டிவிட்டரில் பதிவிட்டது போல, வெறிச்சோடிக்கிடந்த ஜல்சா பங்களா தற்போது மகிழ்ச்சியாகிவிட்டது.
Read Also | Entertainment News: அமிதாப் பச்சனின் எதிரி யார்? திடுக்கிடச்செய்யும் Big Bயின் பதிவு
அமிதாப் பச்சன் தான் கொரோனா பாசிட்டிவ் என்றும், சிகிச்சைக்காக நானாவதி மருத்துவமனைக்குச் செல்வதாகவும் ஜூலை 12 ம் தேதி, ரசிகர்களுக்கு தானே தெரிவித்தார். சிறிது நேரம் கழித்து, அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற செய்தி வந்தது.
அடுத்த நாள் ஐஸ்வர்யா, ஆராத்யா மற்றும் ஜெயா பச்சன் ஆகியோருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையின் முதல் அறிக்கை எதிர்மறையாக வந்தது, ஆனால் இரண்டாவது நாளின் முக்கிய அறிக்கையில், ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா ஆகியோர் கொரோனா பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டது. ஜெயா பச்சனுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. தாயும் மகளும் மருத்துவமனைக்குச் செல்ல, அமிதாப் பச்சனின் பங்களா ஜல்சா சீல் வைக்கப்பட்டு, அனைத்துப் பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரின் உடல்நிலையும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஐஸ்வர்யா மற்றும் ஆராத்யா குணமடைந்து வீடு திரும்பியது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கிறது. குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் அனைவருக்கும் இது நல்ல செய்தி.
கொடுங்காலனாக மாறியுள்ள கொரோனா தொற்றுநோய் உலகெங்கிலும் கோரத் தாண்டவம் ஆடிவருகிறது. ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி என பேதம் பார்க்காமல் அனைவருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியை வென்று வாகை சூடி வீடு திரும்பிய ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், ஆராத்யாவுக்கும் வாழ்த்துக்கள்...