சமீபத்தில் ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த மாணவர் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் PUBG விளையாட்டை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபகாலமாக மாணவர்களிடையே பிரபலமாகி வரும் PUBG விளையாட்டிற்கு அடிமையாகி, மும்பையை சேர்ந்த வாலிபர் பலியானார். அதேப்போல் ஜம்மு - காஷ்மீர் பகுதியை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் தொடர்ந்து 10 நாட்கள் இந்த விளையாட்டை விளையாடி இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்டார்.


இத்தகு விஷயங்கள் தொடர்ந்து அதிகரித்தும் வரும் நிலையில் இந்து விளையாட்டை தடை செய்யவேண்டும் என ஜம்மு ஆளுநரிடன் அம்மாநில மாணவர்கள் சங்கள் கோரிக்கை வைத்துள்ளது.


இதுகுறித்து ஜம்மு - காஷ்மீர் மாணவர் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கையில், சமீப காலமாக மாணவர்களின் நேரத்தை பாழாக்கி வரும் PUBG விளையாட்டு, இளைஞர்களின் நலத்தை மட்டும் ஆல்லாமல், மாணவர்களின் படிப்பினையும் பாதிக்கின்றது. இதன் காரணமாக தான் தற்போது 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில் மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதம் கடுமையாக  பாதித்துள்ளது.


மாணவர்களின் படிப்பை கருத்தில் கொண்டு இந்த விளையாட்டினை நாட்டில் தடைசெய்ய அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்., இந்த விளையாட்டு ஆனது வெளிக்காணும் போதை பொருட்களை விட மோசமானது. தற்போது இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி இருப்பதே இதற்கு உதாரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.