வீட்டில் வளரும் செல்ல பூனைகளுக்கு தனி பெயர் வைத்து அழைத்தால் அது மனிதர்களுடன் அதிகம் உறவாடும் என ஜப்பான் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சோபியா பல்கலை கழக மாணவர்கள் இந்த ஆய்வினை நடத்தியுள்ளனர். சுமார் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பூனைகளின் நினைவாற்றல், உறவாடும் தன்மை ஆகியவற்றை குறித்து ஆராயப்பட்டது.


இந்த ஆய்விற்காக வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளை தேர்ந்தெடுத்து, பிரத்தியேக செய்முறை ஆய்வு செய்துள்ளனர். ஆய்விற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பூனைகளிடன் முன்னதாக பதிவு செய்துவைக்கப்பட்ட ஒலிகளை ஆய்வாளர்கள் ஒலிக்கச் செய்தனர். ஒலிக்கப்பட்ட ஒலிகளில் பல்வேறு வார்த்துகளும், பூனையின் உரியாளரின் குரலில் பதியப்பட்ட பூனைகளின் பெயர்களும் இடம்பெற்று இருந்தன.


இதில் பூனைகளின் பெயர்களை ஒலிக்கும் சத்தங்களுக்கு பூனைகள் சரியான எதிர்செயல் செய்வது தெரியவந்துள்ளது. மேலும் தனது சாக்களின் பெயர்கள் ஒலிக்கப்படும் போது பூனைகள் சரியான எதிர்செயல் செய்துள்ளது. மற்ற வார்த்தைகளை காட்டிலும் பூனைகளின் பெயர்களை ஒலிக்கும் போது பூனைகளிடம் காணப்பட்ட இந்த மாற்றம் பூனைகளின் நினைவாற்றலை வெளிப்படுத்துகிறது எனவும், தனது உரிமையாளரிடன் பூனைகள் கொண்டுள்ள பினைப்பினையும் வெளிப்படுத்துகிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனினும், மனிதர் மற்றும் பூனைகளுக்கு இடையே இருக்கும் பினைப்பு ஆனது மற்ற விலங்குகளுடன் மனிதர்கள் கொண்டிருக்கும் பினைப்பிற்கும் குறைவானதாக உள்ளது எனவும் ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது. அதாவது நாய் - மனிதர் இடையே இருக்கும் நட்புறவை காட்டிலும் பூனை - மனிதர் இடையே இருக்கும் நட்புறவு குறைவு தான் என ஆய்வின் முடிவு தெரிவிக்கின்றது.