விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் பல இயக்குனர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், தற்போது ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்திற்கான திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குனர் ஏ.எல்.விஜய் கிரீடம், மதராச பட்டணம், சைவம், தியா போன்ற பல ஹிட் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கவிருக்கும் இந்த படத்தில் ஜெயலலிதாவில் ரோலில் நடிக்க த்ரிஷா, கீர்த்திசுரேஷ், நயன்தாரா உள்பட முன்னணி நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.


மூன்று மொழிகளில் வெளியாக உள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முதல் பாதி அவருடைய திரையுலக வாழ்க்கை குறித்து இரண்டாம் பாதி அரசியல் வாழ்க்கை குறித்தும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகார்பபூர்வ செய்தி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி வெளிவரும் என கூறப்படுகிறது.