ரூ.500க்கும் குறைவாக கிடைக்கும் ஜியோ, ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள்!
ஜியோ ஃபைபர் ஆனது ரூ.500க்கு கீழ் மூன்று விதமான திட்டங்களை உங்களுக்கு வழங்குகிறது, அதில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டம் மற்ற இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆகும்.
இந்தியாவில் 5ஜி சேவையை வழங்க தொடங்கியதன் மூலம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களாக உருவெடுத்துள்ளன. தற்போது இந்த இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ரூ.500க்கும் குறைவான விலையில் பிராட்பேண்ட் திட்டத்தைப் வழங்குகிறது. ஜியோஃபைபர் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆகியவை இந்திய சந்தையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ள முக்கிய பிராண்டுகளாகும்.
ரூ. 500க்குள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டம்:
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஆனது ரூ.499-ல் ஒரே ஒரு பிராட்பேண்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் வழங்கும் இந்த ரூ.499 திட்டமானது 40 எம்பிபிஎஸ் வேகம் மற்றும் மாதந்தோறும் 3.3டிபி டேட்டாவுடன், தினசரி அன்லிமிடெட் அழைப்புகளுக்கான நன்மைகளையும் வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்துடன் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், வின்க் மியூசிக், பாஸ்டேக் போன்ற பலவற்றிற்கான அணுகலை பெறமுடியும்.
மேலும் படிக்க | குறைந்த விலையில் மாஸ் காட்டும் BSNL! அதிர்ந்து போன ஜியோ
ரூ. 500க்குள் ஜியோஃபைபர் திட்டங்கள்:
ஜியோ ஃபைபர் ஆனது ரூ.500க்கு கீழ் மூன்று விதமான திட்டங்களை உங்களுக்கு வழங்குகிறது, அதில் ஒன்று ப்ரீபெய்ட் திட்டம் மற்ற இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஆகும். ஜியோ ஃபைபர் வழங்கக்கூடிய ப்ரீபெய்ட் திட்டமானது ரூ.399க்கு கிடைக்கிறது, இந்த திட்டத்தில், பயனர்கள் 30 எம்பிபிஎஸ் வேகம், மாதந்தோறும் 3.3டிபி டேட்டாவைப் பெறுகிறார்கள் மற்றும் இதனுடன் இலவச அன்லிமிடெட் அழைப்புகளும் வழங்கப்படுகிறது. அடுத்ததாக இதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ஒன்று ரூ.399 விலையில் கிடைக்கிறது, ப்ரீபெய்ட் திட்டத்தைப் போன்று இது பலன்களை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது அதுமட்டுமல்லாது இந்த சேவை ஆறு மற்றும் பன்னிரண்டு மாதங்களுக்கு வழங்கபடுகிறது.
ஜியோ ஃபைபரின் அடுத்த போஸ்ட்பெய்டு திட்டம் ரூ.499 விலையில் கிடைக்கிறது, இதில் 400+ டிவி சேனல்களுக்கான நன்மைகள் மற்றும் ஓடிடி நன்மைகளும் கிடைக்கிறது. இதில் 300 எம்பிபிஎஸ் இணைய வேகத்துடன் யுனிவர்சல்+, அல்ட் பாலாஜி, ஈரோஸ் நவ், லயன்ஸ்கேட், ஜியோ சினிமா, ஷெமரூமீ மற்றும் ஜியோசாவன் போன்ற ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் இந்த போஸ்ட்பெய்டு திட்டமானது ஏர்டெல்லின் ரூ.499 திட்டத்தை விட குறைவான இணைய வேகத்தை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 7th Pay Commission இரட்டை பொனான்சா: அகவிலைப்படியை தொடர்ந்து பயணப்படியும் உயர்ந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ