அடேங்கப்பா வேற லெவல் போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்திய Jio!!
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் பல நன்மைகளுக்கான அணுகலுடன் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களை ஜியோ அறிவிக்கிறது..!
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் பல நன்மைகளுக்கான அணுகலுடன் போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களை ஜியோ அறிவிக்கிறது..!
தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிவித்து வருக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) தங்களது பயனர்களுக்காக புதிய போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டங்களில் ரூ.399, ரூ.599, ரூ.799, ரூ.999, மற்றும் ரூ.1,499 திட்டங்கள் என பல நன்மைகளுடைய புதிய ஸ்ட்பெய்ட் திட்டங்களைப் அறிமுகம் செய்துள்ளது.
ஜியோவின் புதிய போஸ்ட்பெயிட் திட்டங்கள்...
ரூ.399 போஸ்ட்பெயிட் பிளஸ் திட்டத்தில், பொதுவாக நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஜியோடிவி, ஜியோசவான் போன்றவற்றின் இலவச OTT சந்தாக்கள் மற்றும் இலவச காலர் ட்யூன் வழங்கப்பட உள்ளது.
மேலும், 200GB டேட்டா முதல் துவங்குகின்ற டேட்டா ரோல்ஓவர் 500GB டேட்டா வரை வழங்குகின்றது. குடும்பத்திற்கு ஏற்ற பிளான்கள், சர்வதேச அழைப்புகள், இன் ஃபிளைட் கனெக்ட்டிவிட்டி மற்றும் சர்வதேச ரோமிங் வழங்குகின்றது. ரூ.399 ஜியோ போஸ்ட்பெய்டு பிளஸ் திட்டத்தில் மொத்தமாக 75GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ், இலவச ஓடிடி சேவை மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவர் பெறலாம்.
ரூ.599 போஸ்ட்பெய்ட் பிளஸில் 100GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMS, இலவச OTT சேவை மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக ஃபேம்லி பிளானில் ஒரு சிம் கார்டு வழங்கப்படும்.
ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸில் 150GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMS, இலவச OTT சேவை மற்றும் 200GB டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக ஃபேம்லி பிளானில் இரண்டு சிம் கார்டு வழங்கப்படும்.
ALSO READ | வெறும் ₹.4.15-க்கு 1GB டேட்டா, வரம்பற்ற அழைப்பை வழங்கும் ஏர்டெல்!!
ரூ.999 போஸ்ட்பெய்ட் பிளஸில் 200GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMS, இலவச OTT சேவை மற்றும் 500GB டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக ஃபேம்லி பிளானில் மூன்று சிம் கார்டு வழங்கப்படும்.
உயர் ரக ரூ.1,499 பிளானில் 300GB டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் SMS, இலவச OTT சேவை மற்றும் 500GB டேட்டா ரோல்ஓவர் பெறலாம். கூடுதலாக வரம்பற்ற வாய்ஸ் கால் அழைப்புகளை அமெரிக்கா மற்றும் அரபு அமீரகத்திற்கு மேற்கொள்ளலாம்.
JioPostpaid Plus இணைப்பை எவ்வாறு பெறுவது?
ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் இணைப்பைப் பெற டோர் ஸ்டெப் முறையில் பெற இயலும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிற நெட்வொர்க்குகளின் தற்போதைய போஸ்ட்பெய்டு பயனர்கள் வாட்ஸ்அப்பில் 8850188501 என்ற எண்ணுக்கு ‘Hi’ என்று ஒரு செய்தியை அனுப்பலாம். அதன்பிறகு உங்களை தொடர்பு கொண்டு சிம் கார்டினை நேரடியாக உங்கள் வீட்டிலே வந்து வழங்குவார்கள்.
ஜியோ ப்ரீபெய்டு பயனர்கள் இந்த புதிய திட்டங்களுக்கு மாற 1800 88998899 என்ற எண்ணை அழைக்கலாம். வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் போஸ்ட்பெயிட் திட்டங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஜியோ ஏற்படுத்தியுள்ளது.