ஒரு வருடத்திற்கான இலவச அழைப்பு மற்றும் 750 ஜி.பி 4ஜி டேட்டா வழங்குகிறது ஜியோ. இந்த சலுகை கூகுள் இன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிலையன்ஸ் ஜியோ மற்றொரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான இலவச அழைப்பு மற்றும் 750 ஜிபி 4ஜி தரவு வழங்குகிறது. எனினும், இந்த திட்டம் கூகுள் இன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கக்கூடிய பயனர்களுக்கு மட்டும் இருக்கும்.


இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு அனைத்து விதமான நெட்வொர்க் இலவச அழைப்புகள் கிடைக்கும். எஸ்டிடி மற்றும் ரோமிங் இலவசமாக செய்யலாம். இந்த வாய்ப்பை ஒரு வருடத்திற்க்கு பொருந்தும். இதன் திட்ட மூலம் 750 ஜிபி 4ஜி தரவு இலவசமாக கிடைக்கும். இதன் செல்லுபடி காலம் 360 நாட்கள் ஆகும். ஜியோ ஆப் மற்றும் தேசிய மற்றும் உள்ளூர் செய்திகள் இலவசமாக கிடைக்கும். இந்த சலுகை ரூ 9,999 -க்கு கிடைக்கும்.


ரிலையன்ஸ் ஜியோ-வின் அதிரடி சலுகை: விவரம் உள்ளே!


மற்ற ஆப்பர்:-


ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் சேர்த்து தள்ளுபடி சலுகைகளும் கிடைக்கும். எச்.டி.எஃப்.சி. வங்கி கடன் அட்டை மூலம் கட்டணம் செலுத்தினால் ரூ.8000 வரை கேஸ்-பேக் கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோ சலுகையுடன் கூகுள் இன் பிக்சல் 2 ஸ்மார்ட்போன் வாங்கும் போது பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்தால், ரூ. 5000 அடிஷ்னல் பரிமாற்றம் போனஸ் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சலுகை மூலம் வாடிக்கையாளர்களுக்கு ரூ 22,999 இலாபமாக இருக்கும்.