Jio Users Video Calls: ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை குஷி படுத்தவும், அவர்களை தக்கவைத்துக்கொள்ளவது எப்படி என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால் ஜியோ நெட்வொர்க்கில் (Jio Network) அழைப்பில் பிரச்சனை மற்றும் 4 ஜி தரவு இன்டர்நெட் ஸ்பீட் (4G Internet Speed) பிரச்சனை என வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இருப்பினும்,  ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு திட்டங்கள் மூலம் புதிய மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அதில் ஒன்று ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், நேரடியாக தொலைக்காட்சி மூலம் வீடியோ அழைப்பை செய்ய சிறந்த சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜியோ ஃபைபர் வாய்ஸ் (Jio Fiber Voice) நிறுவனம் புதிய மற்றும் சிறந்த அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், ஜியோ ஃபைபர் பயனர்கள் டிவி திரை மூலம் எச்டி வீடியோ அழைப்புகளைச் செய்ய முடியும். தொலைக்காட்சியில் கேமரா இல்லாதபோது, ​​இந்த வீடியோ அழைப்பு எப்படி வேலை செய்யும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும். எனவே உங்கள் மொபைல் கேமராவை (Mobile camera) வெப்கேமராக பயன்படுத்தி ஸ்மார்ட் டிவி மூலம் வீடியோ அழைப்பை மேற்கொள்ள ஜியோ ஃபைபர் வாய்ஸ் புதிய அம்சத்தை வழங்குகிறது. இதன்மூலம் உங்கள் வீட்டில் உள்ள டிவியின் பெரிய ஸ்க்ரீன் மூலம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு டிவி வீடியோ கால் (TV Video Calling) செய்யலாம்.


ALSO READ | ஜியோவின் அசத்தும் Buy One Get One சலுகை: இதை பெறுவது அப்படி?


ஜியோ வாடிக்கையாளர்கள் டிவி வீடியோ கால் எப்படி செய்வது? 


1. முதலில், ஜியோ பயனர் உங்கள் மொபைல் போனில் "ஜியோஜாய்ன் ஆப்" (JioJoin App) பதிவிறக்கவும்.


2. செயலியை பதிவிறக்கம் செய்தபின், உங்கள் 10 இலக்க ஜியோஃபைபர் எண்ணை (JioFiber number) உள்ளிட்டு சாதனத்துடன் (device) இணைக்கவும்.


3. JioFiber மற்றும் JioJoin ஆப் இணைக்கப்பட்டவுடன், அது உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மொபைல் போனை ஒரு துணை சாதனமாக மாற்றுகிறது.


4. இப்போது உங்கள் மொபைலில் உள்ள JioJoin App- ன் அமைப்புகளுக்குச் சென்று "மொபைலில் கேமரா" (Camera) அம்சத்தை இயக்கவும்.


5. இந்த அம்சத்தை இயக்கிய பிறகு, நீங்கள் தொலைபேசியின் கேமராவை வெப்கேமராகப் (webcam) பயன்படுத்த முடியும், மேலும் அந்த அழைப்பின் வீடியோ வீட்டில் இருக்கும் டிவியில் தொடர்ந்து இயங்கும்.


ALSO READ | Cheapest Jio Plan: நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், டிஸ்னி-ஹாட்ஸ்டார் உட்பட இன்னும் பல இலவச நன்மைகள்


ஜியோஜாய்ன் செயலி மூலம், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஜியோ செட்-டாப் பாக்ஸ் உட்பட அதிகபட்சம் 6 சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஜியோ ஃபைபர் பயனர்கள் 5GHz Wi-Fi பேண்ட் மற்றும் 2.4GHz பேண்டில் இந்த சிறந்த அம்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 6.0 அல்லது அதற்கு மேல் இயங்கும் எந்த மொபைல் போனும் மற்றும் iOS 10.0 பதிப்பில் இயங்கும் ஆப்பிள் ஐபோனும் (Apple iPhone) இந்த செயலியை ஆதரிக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR