இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை இந்திய விளையாட்டு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Physiotherapist, Nutritionist, Bio Mechanist போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலிப் பணியிட விவரம்:


இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) கீழ் செயல்பட்டுவரும் இந்திய பளுதூக்குதல் கூட்டமைப்பில் (IWLF) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


அதன்படி,


Physiotherapist – 02
Bio Mechanist – 01
Strength & Conditioning Expert – 01
Nutritionist – 01
Psychologist – 01
Masseur – 01 என ஒதுக்கப்பட்டுள்ளது.


கல்வித் தகுதி:


Physiotherapist, Psychologist, Bio Mechanist பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Physiotherapy, Psychology, Applied Psychology, Biomechanics, Biophysics போன்ற பாடப்பிரிவில் Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.


Nutritionist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Clinical Nutrition and Dietetics, Food Science & Nutrition போன்ற பாடப்பிரிவில் M.Sc Degree பெற்றவராக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | குதிரையில் சென்று உணவு டெலிவரி செய்த 'swiggy' ஊழியர்! வைரல் ஆகும் வீடியோ!


Strength & Conditioning Expert பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Sports and Exercise Science, Sports Science, Sports Coaching போன்ற பாடப்பிரிவில் Diploma, Bachelors அல்லது Master Degree பெற்றவராக இருக்க வேண்டும்.


Masseur பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது 12 வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் Masseur, Massage Therapy, Sports Masseur ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.


முன் அனுபவம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேசிய / மாநில அரசு விளையாட்டு நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள்வரை அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.


சம்பள விவரம்:


Masseur பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.35,000 என்றும்,, Bio Mechanist பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.1,00,000வரை என்றும், மற்ற அனைத்து பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.80,000 வரை என்றும் மாத சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் விதம்:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Shortlist மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://docs.google.com/forms/d/1xgTTMwNKP4SY-tqp1fUXK_5Za7r-e1uQYr_LW3divBo/viewform?edit_requested=true என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 7ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR