இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - முழு விவரம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம் 50000 ரூபாய் இருந்து இரண்டு லட்சம் ரூபாய்வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Store Officer, Officer, மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Store Officer, Officer, மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 15 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Bank Holidays In August 2022: வங்கிகளுக்கு ஆகஸ்ட் மாதத்தில் 18 நாட்கள் விடுமுறை
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன் அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 4 முதல் 6 ஆண்டுகள்வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | LPG Price Today 1 August 2022: கேஸ் சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ