JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Senior Resident பணிகளுக்கு என மொத்தமாக 32 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலி பணியிடங்கள்:


தற்போது வெளியான அறிவிப்பில், JIPMER நிறுவனத்தில் CTVS, Neurology, Nephrology, Biochemistry, General Medicine, Neonatology போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு என 32 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


கல்வி தகுதி:


Senior Resident பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் NMC / MCI அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MD, MS, DNB, DM, M.Ch பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இந்த ஜிப்மர் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15.10.2022 அன்றைய தேதியின்படி, 45 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


Senior Resident பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின்போது குறைந்தபட்சம் ரூ.90,000 முதல் அதிகபட்சம் ரூ.1,10,000வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.


தேர்வு செய்யப்படும் முறை:


இந்த பணிக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | தந்தேரஸ் திருநாளில் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் அனுப்ப அட்டகாசமான வாழ்த்து செய்திகள்


விண்ணப்ப கட்டணம்:


SC / ST – ரூ.250


General (UR) / OBC / EWS – ரூ.500


விண்ணப்பிக்கும் வழிமுறை:


இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | மறந்தும் ரயிலில் இதனை எடுத்துச் சென்றுவிடாதீர்கள்; கடுமையான அபராதம் விதிக்கப்படும்


மேலும் படிக்க | ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்களே! ஆன்லைனில் இருக்கும் இந்த வசதி உங்களுக்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ