இராசாசி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு - B.sc தேர்ச்சி போதும்
மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் ESWL Technician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி:
ESWL Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்வி நிலையங்களில் Urology Technology பாடப்பிரிவில் B.Sc டிகிரி முடித்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்வாகும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.18,500 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, ஜூலை ஊதியத்தில் பம்பர் ஏற்றம்
ஆர்வமுள்ளவர்கள், ‘முதல்வர், அரசு இராசாசி மருத்துவமனை மதுரை – 20 பிரிவு பொது – 8 (G8)’ என்ற முகவரிக்கு 30.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் நேரில் சென்று புகைப்படத்துடன் கூடிய தங்களின் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | போசோகோ பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன்:டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR