பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: டிசம்பர் 26 முதல் விண்ணப்பிக்கலாம்
இந்தியா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுனத்தில் 300 மேலாண்மை டிரெய்னி பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை எனவும், விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. www.bsnl.co.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்தில் விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வு முறை குறித்து விளக்கப்பட்டு உள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பம் பதிவு செய்யலாம். விண்ணப்பம் இணைப்பு
பணியிடம் : மேலாண்மை டிரெய்னி
நிர்வாகம் : பிஎஸ்என்எல்
காலிப்பணியிடம் : 300
கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து எம்.டெக், எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500
வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்இ/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டு மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.2,200. எஸ்இ/எஸ்டி பிரிவினருக்கு ரூ.1100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி : ஜனவரி 26, 2019.
தேர்வு நடைபெறும் தேதி: மார்ச் 17, 2019.
விண்ணப்பிக்கும் முறை: www.bsnl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேலே இணைக்கப்பட்டு உள்ள (விண்ணப்பம் இணைப்பு) கிளிக் செய்க.