Weight Loss Journey: உடல் எடை குறைப்பு என்பது உணர்வு ரீதியாகவும் சரி, மனநிலை ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும் பல அடுக்குகளில் முயற்சி செய்தால் மட்டுமே அதனை சாத்தியப்படுத்த முடியும். ஒருநாள், இரண்டு நாள்களில் உடல் எடையை குறைத்துவிட முடியாது, இத்தனை மாதங்களில் உடல் எடையை குறைத்துவிடலாம் என்றும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் உடல் எடை குறைப்பு என்பது ஒவ்வொரு விதமாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஊடகவியலாளர் புலக் பாஜ்பாய் (Pulak Bajpai) உடல் எடை குறைப்பில் அவரது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவரின் அனுபவம் நிச்சயம் உங்களில் ஒருவருக்கும் உதவலாம். புலக் பாஜ்பாய் 90 நாள்களில் 14 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். தொடர்ச்சியான மற்றும் ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சிகள் ஆகிய முயற்சிகளின் பலனால் உடல் எடையை குறைத்திருக்கிறார். 


இனிப்புக்கு நோ...?


முதலில் அவரது தினசரி வாழ்க்கைமுறை குறித்தும், உணவுப் பழக்கவழக்கம் குறித்தும் பேசிய அவர்,"எனது உடல் எடை குறைப்பு பயணத்தின் போது, நான் மிக எளிமையான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தையே பின்பற்றியிருக்கிறேன். இரவு 10 மணிக்கு குறைந்த அளவில் மட்டும் உணவை எடுத்துக்கொள்வேன். ஆனால், அதில் பால் எடுத்துக்கொள்ள மாட்டேன், இனிப்பு - சர்க்கரை சேர்த்துக்கொள்ள மாட்டேன், வெளியில் தயாரித்த உணவுகளையோ துரித உணவுகளையோ சாப்பிட மாட்டேன்" என்கிறார்.


மேலும் படிக்க | கிட்னி பிரச்சனை வருவதே இதனால் தான்..! எல்லோருக்கும் எச்சரிக்கை


மேலும் சர்க்கரையை மொத்தமாக உணவில் இருந்து நீக்கிவிட்டீர்களா என்ற கேள்விக்கு,"அதாவது சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளைதான் நான் தவிர்த்தேன். ஆனால், இயற்கையான சர்க்கரை இருக்கும் பழங்கள், உருளைக்கிழங்கு, அரிசி ஆகியவற்றை சேர்த்துக்கொண்டேன். வாரத்தில் ஒருநாள் மட்டும் வெஜ் சான்ட்விச் மற்றும் சிறிய அளவு சர்க்கரை சேர்த்த கோல்ட் காபியை குடித்துக்கொள்வேன், வேறு சீட் மீல்கள் ஏதுமில்லை" என்றார்.


உடல் எடை குறைப்பில் கடினமாக இருந்தது எது? 


உணவுக் கட்டுப்பாடு மற்றும் தினசரி உடற்பயிற்சி ஆகிய இரண்டு மட்டுமே எனக்கு சரியான பலன்களை தந்தது. இவை மட்டுமின்றி தினந்தோறும் நான் சைக்கிள் ஓட்டியதும் எனக்கு பலன் அளித்தது. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டவும், கலோரிகளை எரிக்கவும் அதுதான் உதவியது. உடல் எடையை குறைத்த பின்னரும் கூட உடற்பயிற்சி, சைக்கிள் அழுத்துவது ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன்" என்றார். 


மேலும் அவருக்கு இந்த உடல் எடை குறைப்பு பயணத்தில் மிகவும் கடினமாக இருந்த பயிற்சி என்ன என்பது குறித்து கேட்டபோது,"ஆரம்ப நாள்களில் உடற்பயிற்சிகளை சரியான முறையில் என்னால் செய்ய முடியவில்லை. முதல் 15 நாள்கள் நான் கடினமாக அதனை சீர்செய்ய முயன்றேன். அர்ப்பணிப்பும், நிலைத்தன்மையும்தான் இதற்கு ஒரே வழி.


கடினம் இல்லை


இதுமட்டுமின்றி, சாலையோர உணவுகள், இனிப்பு பண்டங்கள், காரசார உணவுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும் என அடிக்கடி தூண்டும். ஆனால், உணவுப் பழக்கவழக்கத்தில் உறுதியாக இருந்ததுதான் எனது உடல் எடை குறைப்பில் முக்கியமானதாகும். சைக்கிளிங் மற்றும் உடற்பயிற்சி என்னை உணவுக் கட்டுப்பாடு நோக்கி நகர்த்தியது" என்றார். 


மேலும், உடல் எடையை குறைப்பது அவ்வளவு கடினம் இல்லை என்றும் சரியான முறையில் நீங்கள் முயற்சி செய்து முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் உடல் எடையை குறைப்பது எளிது என்கிறார் புலக் பாஜ்பாய். 


(பொறுப்பு துறப்பு: இது ஊடகவியலாளர் புலக் பாஜ்பாயின் தனிப்பட்ட அனுபவ பகிர்வு மட்டுமே. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். எதற்கும் Zee News பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | இந்த 5 உணவுகளை காலையில் சாப்பிடாதீங்க... பிரபல நடிகையின் கணவர் சொன்ன டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ