Guru Gochar 2022:  குரு கிரகங்களில் பெரியவர். அவரே, வளர்ச்சி அல்லது விருத்திக்கு காரணகர்த்தா என்பதால் குரு பகவான் நமது வாழ்க்கையின் சுகத்தையும், கஷ்டத்தையும் தீர்மானிக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஞானக்காரகன் என்று அழைக்கப்படும் வியாழன், குடும்பம், குழந்தைகள் உட்பட சந்ததி, மகிழ்ச்சி என பல விஷயங்களுக்கு காரகர் என்பது போலவே மகிழ்ச்சியின்மை, வறுமை, உடல்நலக்குறைவு என வாழ்க்கையின் சங்கடத்திற்கும் காரணமாக இருக்கிறார்.  


ஒருவரின் ஜாதகத்தில் வியாழன் எங்கு இருக்கிறாரோ அதன் அடிப்படையிலும், அவரின் பார்வை விழும் ராசியின் இடத்தின் அடிப்படையிலும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நல்லதும் அல்லதும தீர்மானிக்கப்படுகிறது.


ஜோதிட சாஸ்திரத்தின் சிறப்பம்சமே,  எந்த ஒரு கிரகமும் ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரே மாதிரியான செல்வ பலன்களைத் தருவதில்லை என்பதுதான். 


எடுத்துகாட்டாக, 11வது வீட்டின் அதிபதி மற்றும் அவர் அமர்ந்திருக்கும் இடம் மற்றும் அவருக்கு 2வது வீடான தொடர்பு, 11வது வீட்டைப் பார்க்கும் கிரகங்கள் அல்லதுயோக காரகம் போன்றவையே ஒருவரின் செல்ல நிலையை முடிவு செய்கிறது.


மேலும் படிக்க | சனிப்பெயர்ச்சி: இன்னும் சில நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 


தேவர்களின் குரு என்று அழைக்கப்படும் வியாழன் ஆண்டிற்கு ஒருமுறை பெயர்ச்சியாகிறார். அண்மையில் மீன ராசிக்கு பரிவர்த்தனையான வியாழன், அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறு பலன்களை என்றாலும், செல்வத்தை அள்ளித்தரும் 3 ராசிகள் இவை. 


குரு மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறார், அவரது அதிர்ஷ்ட பார்வை பட்டால், தொழில், செல்வம், திருமண வாழ்க்கை என மூன்றுமே அருமையாக அமையும்.


ரிஷபம்: ஒரு வருடம் மீன ராசியில் இருக்கும் குரு,  ரிஷப ராசிக்காரர்களுக்கு அதீத அதிர்ஷ்டத்தைத் தர காத்துக் கொண்டிருக்கிறார்.


வியாழனின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் இருந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடும். ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலைமையை வலுப்படுத்தும் குரு, புதிய வருமானத்திற்கான வழிகளை காட்டுவார்.


ரிஷப ராசிக்காரர்களில் தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவிலான முன்னேற்றம் ஏற்படும். பணி செய்பவர்களுக்கும் வேலையிடத்தில் பாராட்டுகள் குவியும். இதனால் மதிப்பு மரியாதை அதிகரிப்பதுடன் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.  


மேலும் படிக்க | குருவின் அருளால் இந்த ராசியினருக்கு ஆண்டு முழுவதும் ராஜயோகம்


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழன் பெயர்ச்சி அவர்களின் தொழிலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வும், சம்பள உயர்வும்  கிடைக்கலாம்.


வியாபாரிகளுக்கு நிலைமை சாதகமாக இருக்கும். குறிப்பாக சந்தைப்படுத்தல்-ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் பெரிய பலனைப் பெறுவார்கள். அவருடைய தொழிலில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரலாம்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட தேவதையும் அருட்பார்வை அதிகரித்துவிட்டது. இதற்கு காரணம் குருவின் அருட்கடாட்சம் தான். கடக ராசிக்காரர்கள் தடைகள் அனைத்தையும் கடந்து எளிதாக வெற்றி பெறுவார்கள். தடைப்பட்ட பணிகளும் தற்போது தடைகளை உடைத்து முன்னேறும்.


கடக ராசியினருக்கு வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள்அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து அதிக லாபம் கிடைக்கும். கடக ராசி வியாபாரிகளுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். சாப்பாடு, பானங்கள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அதிக லாபம் ஈட்டலாம்.


ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். நாள்பட்ட நோய் முடிவுக்கு வந்து ஆரோக்கியத்துடன் செல்வத்தை அனுபவிக்கும் யோகத்தை குரு பகவான் கடக ராசியினருக்கு கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR