இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள்

Mercury transit: தொழில்-வியாபாரத்திற்கு அதிபதியான புதன் கிரகம் தனது ராசியில் இருந்து மாறிவிட்டார். உங்கள் ராசிக்கு சுபமா அல்லது அசுபமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Apr 8, 2022, 09:29 AM IST
  • ராசி மாறிய புதன்
  • புதனின் சஞ்சாரம் சுபமா அசுபமா?
  • பண வரவு எப்படி இருக்கும்
இன்றைய புதன் பெயர்ச்சி உங்களுக்கு சுபமா அசுபமா புதனின் பெயர்ச்சி பலன்கள் title=

புதன் ராசி மாற்றம் 2022: கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் இன்று அதாவது ஏப்ரல் 8, 2022 அன்று ராசியை மாற்றிவிட்டார்

புதன் ஏப்ரல் 24 வரை மேஷ ராசியில் சஞ்சரித்து அதன் பிறகு ரிஷபம் ராசிக்குள் நுழைகிறார். புதனின் ராசி மாற்றத்தின் தாக்கம் தொழில்-வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு என அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .

புதன் கிரகம் தனது ராசியை மாற்றி மேஷ ராசிக்குள் நுழைந்துவிட்டார். புதனின் ராசி மாற்றம் வேலை-வியாபாரத்தில் முன்னேற்றத்தை பாதிக்கிறது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் இந்த பெயர்ச்சி எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் புதன்: இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும் 

மேஷம்: புதன் மேஷ ராசியில் நுழைகிறார். இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை கிடைக்கும். செய்யும் வேலைக்க்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். இல்லையெனில், எதிரிகள் உங்களை அவமானப்படுத்தவோ அல்லது தீங்கு செய்யவும் முயலலாம். கடன் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.

ரிஷபம்: புதனின் சஞ்சாரத்தால் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். சில மோசமான செய்திகள் வரலாம். இருப்பினும், வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற கனவு நிறைவேறும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது நல்ல நேரம்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பண விசயங்கள் சாதகமாக இருக்கும். வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். புதுமணத் தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான நல்ல தகவல்களைப் பெறலாம்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மரியாதையையும் மரியாதையையும் தரும் காலம். பதவி உயர்வு வரும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் தொழிலை மேம்படுத்த முயற்சித்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வீடு வாகனம் வாங்கலாம். சவால்களை சமாளிக்க முடியும். முதலாளியுடனான உறவை சுமூகமாக வைத்திருக்கவும்.

.மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பம்பர் பரிசு 

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி பெறுவீர்கள். சவால்களை சமாளிக்க முடியும். தேர்வு-நேர்காணலில் வெற்றி பெறுவீர்கள். எந்த ஒரு வெளிநாட்டு வேலையாக இருந்தாலும் ஆக்கப்பூர்வமாக முடிவடையும். கோர்ட்டில் வழக்கு இருந்தால் வெற்றி கிடைக்கும்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகள் வரலாம். உடல்நலப் பிரச்சனை வரலாம். பணியிடத்தில் யாராவது உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். எனவே கவனமாக இருங்கள் மற்றும் கடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம்.

துலாம்: திருமண துணையை எதிர்பார்க்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். கூட்டு முயற்சியில் ஈடுபடுபவர்களும் வெற்றி பெறுவார்கள். வீயாபாரிகளுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: மேஷ ராசியில் புதன் நுழைவதால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வயிறு அல்லது செரிமான அமைப்பு தொடர்பான நோய்கள் ஏற்படலாம். நீதிமன்றத்தில் வழக்கு இருந்தால் வெளியில் தீர்த்துக் கொள்ளுங்கள். சொத்து விஷயங்களில் தீர்வு காண அல்லது வாங்க இது ஒரு நல்ல நேரம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் அனைத்து வேலைகளிலும் வெற்றியைத் தரும். குறிப்பாக மாணவர்களுக்கு, இந்த நேரம் மிகவும் சாதகமானது. பிள்ளைகள் தொடர்பான நல்ல செய்திகள் பெற்றோர்களுக்கு கிடைக்கும்.  

மேலும் படிக்க | வெற்றியே தாரக மந்திரம் உழைப்பாளி ராசிகள்

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சராசரியாக இருக்கும். சில பொருட்கள் திருட்டு போகலாம், பயணத்தின் போது கவனமாக இருங்கள். வெளியூர் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிவடையும். வீடு சொத்துக்களால் லாபம் உண்டாகும். புதிய கார் வாங்கலாம்.

கும்பம்: புதனின் சஞ்சாரம் கும்ப ராசியினருக்கு தைரியத்தை அதிகரிக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இந்த நேரத்தில் மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வத்தை அதிகரிக்க்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் திறமையின் அடிப்படையில் ஒவ்வொரு பணியையும் முடிப்பீர்கள்.

மீனம்: புதனின் சஞ்சாரம் மீன ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களை சந்திக்க வைக்கும். பணம் சாதகமாக இருக்கும். பழைய பணம் திரும்ப கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். எந்த ஒரு பெரிய வேலையும் செய்வதற்கு முன் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பண விஷயத்தில் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்: சனி, செவ்வாயின் அருளால் செல்வம் கொழிக்கும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News