Jupiter Transit 2022: நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குரு பகவான் திருமண வாழ்க்கை, மகிழ்ச்சி-செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல தொழில் ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகம்.  தற்போது குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருக்கிறார் அடுத்த வருடம் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருக்கப் போகும் நிலையில், 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அடுத்த ஒரு வருடத்திற்கு செல்வ செழிப்பில் மிதக்க போகும் 3 ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில், தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் நிலையில், இந்த கிரகம் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு வேலையிலும்  வாழ்க்கையிலும் பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். குருவின் அருளால் தொழிலில் வெற்றி பெற்று, மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறி, நிறைய பணம் சம்பாதிக்கிறார் . திருமண வாழ்க்கையும் மிக இனிமையாக இருக்கும்.


இந்த நேரத்தில் குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருப்பதால், அவரது நிலை இன்னும் முக்கியமானது. அவர் 22 ஏப்ரல் 2023 வரை மீனத்தில் இருப்பார். அப்போது கீழ்கண்ட 3 ராசிக்காரர்களிடம் அன்பு மழை பொழிவதால், பண வரவும், வளமும் ஒரே சேர பெறுவார்கள். 


இந்த 3 ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி காலம் மிகவும் சாதகமாக இருக்கும்


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்கு வியாழன் மிகவும் சுப பலன்களை அள்ளித் தருவார். தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வேலை மேம்படும். முதலாளி உங்கள் வேலையை விரும்புவார். பதவி உயர்வு, புதிய வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் இருக்கும். நிதி நிலை வலுவடையும். வர்த்தகர்களின் பெரிய ஒப்பந்தங்கள் இறுதியாகும்.  திருமணம் கைகூடும்.


மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு வருடம் மிகவும் சிறப்பாக இருக்கும். மீன ராசியின் குரு அவர்களின் தொழிலில் ஒரு பெரிய முன்னேற்றத்தை கொடுக்க முடியும். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வும் கிடைக்கலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமானதாக இருக்கும். அவருடைய வியாபாரம் வெகுவாக வளரும். 


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் இந்த சஞ்சாரம் அளவற்ற மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். அவர்கள் சில புதிய வேலைகளை முயற்சி செய்யலாம் மற்றும் அதிர்ஷ்டமும் பிரகாசிக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தம் அல்லது புதிய திட்டம் கிடைக்கும் என்று காத்திருந்தவர்ககளின் காத்திருப்பு முடிவுக்கு வரலாம். தொழில் விஷயமாக பயணம் மேற்கொள்வீர்கள். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாட்களாக் வாட்டி வரும் நோய் குணமாகும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR