சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். இந்த நேரத்தில் பூமியின்  சில  பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 29, 2022, 09:51 AM IST
சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள் title=

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது ஏற்படும் வானியல் நிகழ்வே சூரிய கிரகணம் ஆகும். இந்த நேரத்தில் பூமியின்  சில  பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படும்.

ஏப்ரல் 30, சனிக்கிழமை சித்திரை மாதத்தின் கிருஷ்ண பக்ஷ அமாவாசை நாளில் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. அமாவாசை சனிக்கிழமையில் வந்தால், அது சனி  அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. 

இந்து மதத்தில் சனிக்கிழமைகளில் அமாவாசைக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு அமாவாசையும் முன்னேர் வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும், சனி அமாவாசை நாளில் ஸ்நானம் செய்து, முன்னோர்களை நினைத்து தானம் செய்வது தர்ப்பணம் செய்வதால், பித்ருக்களின் ஆசி கிடைத்து வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கும்.

சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில் வரும் 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஒரு முக்கியமான அரிய நிகழ்வு. இந்த சூரிய கிரகணம் பகுதியளவில் தான், முழு சூரிய கிரகணம் அல்ல. ஆனால் ஒரே நாளில் சூரிய கிரகணம் மற்றும் சனிஅமாவாசை ஏற்படுவது சிலரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிக்கிழமை சனி பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள நாளாகும். எனவே இந்த நாளில் சனி பகவானுக்கு சிறப்பு வழிபாடும் செய்யப்படுகிறது.

சூரிய கிரகணம் மற்றும் சனி அமாவாசை ஒரே நாளில் வருவது ஒரு அரிய நிகழ்வு. ஏப்ரல் 30-ம் தேதி, சனி அமாவாசை தினத்தன்று, ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2022: செல்வ செழிப்பில் மிதக்க போகும் 6 ராசிக்காரர்கள்

மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் 

மேஷம் - சூரிய கிரகணத்தின் தாக்கம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக கருத முடியாது. எனவே, இந்த நாளில் இந்த ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. 

கடகம் - இந்த சூரிய கிரகணம் கடக ராசிக்காரர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காமலும், யாருடனும் கருத்து வேறுபாடு கொள்ளாமலும் இருப்பது நல்லது. உங்கள் சிந்தனை நேர்மறையாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம் -  இந்த சூரிய கிரகணமும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இல்லை. இந்த காலத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டியது அவசியம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் பயணம் செய்ய வேண்டாம். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரர்கள் தலைவிதி மாறும், பண மழை பொழியும் 

மேலும் படிக்க | இந்த ராசிக்கார பெண்கள் அதிர்ஷ்டத்தின் மறு அவதாரமாய் இருப்பார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News